600 கோடி சொத்து.. 100+ தொகுதிகளில் முன்னிலை.. வெற்றிக் கனியைப் பறிக்குமா தமிழக வெற்றிக் கழகம்?

தமிழ் திரையுலகில் பல வருடங்களாக முடிசூடா மன்னனாக திகழ்பவர் நடிகர் விஜய். தற்போது தமிழக வெற்றி கழகம் (TVK) என்னும் கட்சியின் மூலமாக தமிழக அரசியலிலும் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளார். 2026 ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட்டார். முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டு மக்களின் மனதைக் கவர்ந்த விஜய் மே 4-ஆம் தேதியான இன்றைய தினம் வெளியாகும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையிலும் முன்னிலை வகித்து வருகிறார். இது அரசியல் வட்டாரத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

வெற்றிக் கனியைப் பறிக்குமா தமிழக வெற்றிக் கழகம்?

விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதியிலும் போட்டியிட்டார். புதிதாக ஒரு கட்சி தொடங்கி முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கிய விஜய்க்கு பலரும் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து வந்தனர். ஏற்கனவே தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் பிற கட்சிகளைப் போலவே ஒரு தனி பெரும் கட்சியாக TVK உருவெடுத்துள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களுடைய சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் அந்த வகையில் விஜய் தேர்தல் ஆணையத்தில் குறிப்பிட்ட சொத்து விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

டிவிகே தலைவரின் சொத்து மதிப்பு: சினிமாவில் பெரும் வசூலை அள்ளிய விஜய், தேர்தல் ஆணையத்தில் தன்னுடைய சொத்து விவரங்களைத் தாக்கல் செய்திருந்தார். அதன் படி விஜய்-யின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 603.20 கோடியாக உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பணக்கார நடிகராகவும், அதே சமயம் பணக்கார அரசியல்வாதியாகவும் விஜய் இருக்கிறார். விஜய்-யின் அசையும் சொத்துக்கள் ரூ. 404.58 கோடியாக உள்ளது. அதேபோல அவருடைய அசையா சொத்துக்கள் ரூ. 198.62 கோடியாக உள்ளது.

விஜய் அளித்த விபரங்களின்படி 2024 முதல் 2025-ஆம் ஆண்டில் அவருடைய வருமானம் ரூ.184.53 கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவருடைய சொத்துக்களின் பெரும் பகுதி ரொக்கமாகவும், முதலீடுகளாவும் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேங்க் டெபாசிட்: விஜய் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின்படி அவருடைய செல்வத்தில் பெரும் பகுதி அதாவது ரூ. 213 கோடி பேங்க் டெபாசிட்டா க உள்ளது. பல்வேறு வங்கி கணக்கிலும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் சொத்துக்கள்: சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் TVK தலைவருக்குச் சொந்தமாக சொத்துக்கள் உள்ளன. அதேபோல கொடைக்கானலிலும் விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு சொத்துக்களை விஜய் கொண்டுள்ளார்.

லக்சரி கார்கள்: பிஎம்டபிள்யூ, லெக்ஸஸ் மற்றும் டொயோட்டா வெல்ஃபயர் போன்ற கார்களையும் விஜய் பயன்படுத்தி வருகிறார்.

விஜய் குடும்பத்தின் சொத்து மதிப்பு: விஜய்-யின் மனைவி சங்கீதா அசையும் சொத்து மற்றும் அசையாச் சொத்துக்கள் உட்பட சுமார் ரூ. 15.76 கோடி மதிப்பிலான சொத்துக்களை அறிவித்திருக்கிறார். அதோடு விஜய் சில அறக்கட்டளைகளுக்கும் நிதி உதவி வழங்கி வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழகத்தின் சிறந்த சினிமா நட்சத்திரமாக மட்டுமல்லாமல் ஒரு சக்தி வாய்ந்த கட்சி தலைவராகவும் விஜய் உருவெடுத்திருக்கிறார். இன்றைய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தான் டிவிகே தலைவரை மக்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது தெரியவரும். இந்தக் கட்டுரை எழுதும் வரையில் பிற கட்சிகளை விட விஜய் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+