தமிழ் திரையுலகில் இளைய தளபதியாக அறிமுகமாகி இன்று தமிழக அரசியலிலும் ஒரு சிறந்த தலைவராக உருவெடுத்திருக்கிறார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்னும் தன்னுடைய கட்சியின் மூலமாக சுமார் 108 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழக சட்டசபை தேர்தலிலும் அதிரடி காட்டிய விஜய் முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அது குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

தமிழகத்தில் விஜய்க்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பொதுவாக ஒருவரின் ரசிகராக மக்கள் இருக்கும் போது, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, சம்பளம், கல்வித் தகுதி போன்றவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அப்படி விஜய் முதன்முதலாக பெற்ற சம்பளத்தைக் கேட்டால் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.
கோலிவுட்ல நம்பர் 1 இடத்தில் இருக்கும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். விஜய் நடித்த லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனையை எட்டியது. சுமார் ரூ.600 கோடியைக் கடந்து சாதனை படைத்தது. அதன் பிறகு "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்று சொல்லப்படுகிற கோட் திரைப்படம் விஜய்க்கு ரூ.400 கோடி வசூலை அள்ளித் தந்தது. இப்படி சினிமாவில் உச்சத்தில் இருந்து கொண்டு, அதையெல்லாம் விடுத்து அரசியலுக்கு வருவது சாதாரண விஷயம் கிடையாது. இறுதியாக விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அவர் நடித்த திரைப்படமான ஜனநாயகனுக்கு ரூ. 220 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்னது ஒரு திரைப்படத்திற்கே இவ்வளவு சம்பளமா? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவ்வளவு சீக்கிரமாக இந்த சம்பளத்தை விஜய் எட்டவில்லை. கோடிகளில் சம்பாதிப்பதற்கு முன்பு ஆயிரத்திற்கு கீழ் கூட விஜய் சம்பளமாக வாங்கியிருக்கிறார்.
விஜய்யின் முதல் படத்திற்கு எவ்வளவு சம்பளம்?: தமிழ் திரையுலகில் சிறந்த தயாரிப்பாளராக விளங்கிய S.A.சந்திரசேகரின் மகன் தான் விஜய். 1984-ஆம் ஆண்டு விஜய் தனது முதல் படமான "வெற்றி" எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தை இயக்கியவர் அவருடைய தந்தை சந்திரசேகர். டெக்கான் க்ரோனிக்கல் செய்தியின் படி "வெற்றி" படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு வெறும் 500 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டதாக 2017-ஆம் ஆண்டு அவருடைய தந்தை அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
வெறும் 500 ரூபாய் சம்பளத்தில் தனது திரையுலக பயணத்தைத் தொடங்கிய விஜய் தற்போது ரூ.220 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார். இவருடைய சாதனையைக் கணக்கிட்டு பார்த்தால் இது பன்மடங்கு அதிகம். 500 ரூபாயில் தொடங்கி இன்று 440000000 சதவீதம் வரை அதிக ஊதியத்தைப் பெற்று வருகிறார்.
திரையில் அவர் ஏற்று நடித்த ஜனநாயகன் திரைப்படம் இன்று நிஜ அரசியலிலும் அவருக்கு பொருந்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பக் காலத்தில் விஜய்க்கு பல விமர்சனங்கள் எழுந்தது. அதன் பிறகு தன்னை சிறுக சிறுக மாற்றிக்கொண்டு ரசிகர்களை ஈர்த்தது மட்டுமின்றி தற்போது தமிழக மக்களையும் ஈர்க்கத் தொடங்கியுள்ளார். 108 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் விஜய், தமிழக அரசியலில் என்ன மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறார்? என்பதைத் தெரிந்து கொள்ள தமிழகமே ஆவலோடு காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications