இந்தியாவில் ஆயிரக்கணக்கானவர்கள் நகை விற்பனை தொழிலில் ஈடுபட்டாலும் ஒரு சிலரால் மட்டுமே அதில் பெரிய அளவு வளர்ச்சி அடைய முடிகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் மதுரையை தலைமை இடமாகக் கொண்டு தொடங்கப்பட்டு தற்போது தன்னுடைய கிளைகளை பரப்பி வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது தங்கமயில் ஜூவல்லரி.
மதுரையில் பத்துக்கு பத்து சதுர அடி பரப்பளவில் சிறிய கடையாக தொடங்கப்பட்டு தற்போது மிகப்பெரிய சாம்ராஜ்யமாக வளர்ந்து நிற்கிறது. மதுரையை பூர்வீகமாக கொண்ட பாலுச்சாமி செட்டியார், மதுரையில் பாலு ஜூவல்லரி என்ற ஒரு சிறிய நகைக்கடையை நடத்தி வந்தார். அதுதான் தற்போது தங்கமயில் என்ற பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுத்திருக்கிறது.

மதுரை பிரதான கடைவீதியில் வாடகை அதிகமாக இருந்தால் வேறு ஒரு தெருவில் கடை வைத்திருந்தார் . இந்நிலையில் அவருடைய மகன்கள் ரமேஷ், குமார் உள்ளிட்டோர் தந்தையின் தொழிலில் களமிறங்கினர். 1980களில் இவர்கள் இந்த தொழிலில் கால்பதித்து மதுரை நகை கடை பஜாரில் கடையை திறந்தார்கள். அப்போது முதலே பாலு ஜூவல்லரிக்கு ஏறுமுகம் தான்.
தொழிலை விரிவாக்கம் செய்த அவர்கள் 2000 ஆம் ஆண்டு தங்கமயில் ஜூவல்லரி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கி கடையின் பெயரை மாற்றினர். இதன் முதல் கிளை மதுரையில் தொடங்கப்பட்டது . அடுத்த 7 ஆண்டுகளிலேயே ராஜபாளையம் , காரைக்குடியில் அடுத்தடுத்த கிளைகள் திறக்கப்பட்டன . இதனை அடுத்து ராமநாதபுரம், திண்டுக்கல் ,சிவகாசி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் ,சேலம், சென்னை ,திருநெல்வேலி , தர்மபுரி என தற்போது தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம் 64 இடங்களில் தன்னுடைய கிளைகளை நிறுவி இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஒரு மிக முக்கியமான நகை விற்பனை நிறுவனமாகவும் தங்கமயில் செயல்பட்டு வருகிறது. 2010 ஆம் ஆண்டு மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தங்கமயில் நிறுவன பங்குகள் பட்டியலிடப்பட்டன. அப்போது இதன் சந்தை மூல தன மதிப்பு 100 கோடி ரூபாய் தான்.
பின்னர் மூன்றாம் தலைமுறையினர் தலையெடுத்து தொழிலை நவீனப்படுத்தினர். டாடாவின் டைடனுக்கு முன்பே தங்கமயில் நிறுவனம் நகை தொழிலை கார்ப்பரேட் முறைக்குகொண்டு வந்தது. வடிவமைப்பு துறை, ஹெச்.ஆர் துறை, தொழில்நுட்ப துறை என தனி பிரிவுகளை உண்டாக்கியது. மதுரையிலேயே நகை வடிவமைப்பாளர்களை கொண்டு பிரத்தியேகமாக நகைகளை வடிவமைக்கிறார்கள்.
சாதாரண கடையாக இருந்து தற்போது தங்கமயில் ஜுவல்லர்ஸ் 11000 கோடி சந்தை மதிப்புள்ள சக்தியாக உருவெடுத்து இருக்கிறது. பிரான்ஸை சேர்ந்த அமுண்டி என்ற முதலீட்டு நிறுவனம் இதில் தேடி வந்து முதலீடு செய்திருப்பதே இதன் வளர்ச்சிக்கான ஆதாரம். ரமேஷ் தங்கமயில் ஜுவல்லரி நிறுவனத்தின் நிறுவன உறுப்பினராகவும் இணை மேலாண் இயக்குனர் ஆகவும் செயல்பட்டு வருகிறார்.
பங்கு சந்தையில் தங்கமயில் ஜூவல்லரி நிறுவனத்தின் ஒரு பங்கு இன்றைய தேதியில் 3882 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது . இந்த நிறுவன பங்கின் 52 வார கால அதிகபட்ச மதிப்பு 4,149 ரூபாய் ஆகும். இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் மதிப்பு 11,904 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் வருவாயை பொருத்தவரை 2024 ஆம் ஆண்டில் வருமானம் 3832 கோடி , இது 2025 ஆம் நிதி ஆண்டில் 4916 கோடியாக உயர்ந்திருக்கிறது. நிறுவனத்தின் லாபம் 119 கோடி ரூபாயாக இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்புகளில் 61% பங்குகள் பிரமோட்டர்கள் வசம் இருக்கின்றன. சில்லறை முதலீட்டாளர்கள் 17.12 சதவீத பங்குகளையும், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் 15.6 ஒரு சதவீத பங்குகளையும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 4.70% பங்குகளையும் வைத்திருக்கின்றன. கடந்த ஓராண்டு காலத்தில் தங்கமயில் ஜுவல்லரி நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 99.79% உயர்ந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications