தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அதிக அளவில் மழை பெய்தால் தங்கள் பயிர்களுக்கு நல்ல லாபம் கிடைக்குமா என்ற பயம் வந்துவிடும். அதற்கு ஏற்றார் போல சமீபத்தில் பெய்த மழை காரணமாகவும், அண்டை மாநிலங்களில் இருந்தும் அதே நேரத்தில் அறுவடை செய்த பயிர்கள் சந்தைக்கு வந்த காரணத்தினாலும் தஞ்சாவூரில் உள்ள வாழை விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். சில பயிர்கள் அதிக மழை பெய்தாலும் நல்ல விளைச்சலைத் தரும். சில பயிர்களுக்கு அதிக தண்ணீர் அறவே ஆகாது.
இந்த முறை பிற பகுதிகளிலிருந்து வரத்து அதிகமானதாலும், மழை பெய்ததாலும் தஞ்சாவூரில் உள்ள விவசாயிகள் தங்கள் அறுவடைக்கு 6 ரூபாய்க்கும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தஞ்சை விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் குறைந்த அளவு தான் மக்கள் தங்கள் பொருட்களை வாங்குவார்கள் என்று பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரியும். ஆனால் கடந்த ஆண்டுகளில் இதே சூழல் நிலவி இருந்தாலும், விற்பனை சிறப்பாக இருந்தது. நெல் சாகுபடியில் அதிக ஆதிக்கம் செலுத்தும் தஞ்சாவூர் டெல்டா மாவட்டத்தில் வாழை விவசாயிகளும் அதிக அளவில் உள்ளனர்.
குடமுருட்டி, காவிரி போன்ற பாசனங்களின் மூலம் திருவையாறு, கடுவெளி, பனையூர், வடுகக்குடி, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 11,000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு மட்டுமின்றி வாழை இலையும் வருமானம் ஈட்டித் தருவதால் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் "பூவன்" ரக வாழையை பயிரிடுகின்றனர்.
சமீபத்திய மாதங்களில் ஆயுத பூஜை, பண்டிகைக் காலங்கள் போன்ற நாட்களில் தங்களுடைய விலைப் பொருட்களுக்கு கிலோவுக்கு 30 ரூபாய் வரை வருமானம் கிடைத்ததாக இங்குள்ள விவசாயிகள் கூறுகின்றனர். வடுகக்குடியைச் சேர்ந்த வாழை விவசாயியான எம். மதியழகன் என்ற வாழை விவசாயி மழையின் காரணமாக தற்போது கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கிறது. கடந்த மாதம் மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு கூட வாழைப்பழங்களை ஏற்றி அனுப்பினோம். ஆனால் தற்போது மற்ற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவதில்லை.
அதுமட்டுமின்றி ஆந்திரா மாநிலம், கர்நாடகா போன்ற பகுதிகளிலும் வாழை அறுவடை தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக எந்த வியாபாரிகளும் தஞ்சாவூருக்கு வரவில்லை. மழைக்காலத்தில் வாழைப்பழத்தின் தேவை குறைகிறது. இதனால் கொள்முதல் விலை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மழைக்காலத்தில் ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் 15 ரூபாயாவது கிடைத்தது. இன்னும் சில பகுதிகளில் 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கிடைத்தது. இந்த முறை தான் மிகக் குறைந்த வருமானம் கிடைக்கிறது என்று மதியழகன் தனது கவலையை தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications