தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான தஞ்சை நெற்களஞ்சியம், தற்போது ஐடி துறையில் யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் வளர்ந்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த நிலையில் ஐடி துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப, விரைவில் விமானப் போக்குவரத்து சேவையும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
எந்தொரு துறையாக இருந்தாலும் சரியான உள்கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகள் இருந்தால் கட்டாயம் பெரிய அளவிலான வளர்ச்சியை அடையும். இந்த வகையில் தஞ்சாவூரில் நியோ டைடல் பார்க் அமைத்து மூலம் உருவாகியிருக்கும் ஐடி துறை புரட்சியை பெரியதாக மாற்றும் பொருட்டு விமானச் சேவை கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகிறது.

தஞ்சாவூரில் இருக்கும் ஏர்போர்ஸ் ஸ்டேஷனை, பயணிகள் விமான போக்குவரத்து தளமாக மாற்றும் முயற்சிகள் வேகமாக நடந்து வருகிறது. இதற்காக தொழிற்துறை அமைச்சர் TRB ராஜா மத்திய பாதுகாப்புத் துறை மற்றும் சிவில் ஏவியேஷன் துறை செயலாளர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது ஏர்போர்ஸ் ஸ்டேஷன் உடன் ஒட்டியிருக்கும் 26.5 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி பயணிகள் விமான போக்குவரத்து தளமாக மாற்றும் முயற்சிக்காக ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஏர் போர்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் விமான படை இந்த 26.5 ஏக்கர் நிலத்தை AAI-க்கு கொடுக்க உள்ளது.
இதை தொடர்ந்து இந்த நிலம் மற்றும் தற்போது இருக்கும் ஏர்போர்ஸ் ஸ்டேஷன் ஆகியவைற்றை சேர்த்து பயணிகள் விமான நிலையமாக மாற்றும் முயற்சிகள் துவங்க உள்ளது. இந்த திட்டத்தைச் செயல்படுத்த AAI அமைப்பு தமிழ்நாடு அரசை விமான நிலையத்தில் இருந்து 4 வழி சாலை அமைக்கக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் மூலம் தஞ்சாவூரில் பயணிகள் விமான முனைய கட்டடம் அமைக்கும் திட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது நிறைவேறும் பட்சத்தில் தஞ்சைக்கு விமானப் போக்குவரத்து வசதி கிடைக்கும். மேலும், விமான நிலையத்திற்கு வசதியான நான்கு வழி சாலை அமைக்கவும் மாநில அரசைக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் விரைவில் இதைச் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications