தமிழ்நாட்டில் பெரு நகரங்களைக் காட்டிலும் சிறு நகரங்களின் வளர்ச்சிக்கு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு அதிகப்படியான ஆதரவு தெரிவித்து வரும் வேளையில், முதலீட்டுச் சந்தையும், வர்த்தக சந்தையும் இதை பார்முலா-வை பின்பற்றிக் கொண்டு உள்ளது.
இதன் அடிப்படையில் டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு மினி டைடல் பார்க் அமைத்து, இம்மாவட்டத்தில் ஐடி துறை வளர்ச்சிக்கு வித்திட்டது. டெல்டா பகுதியில் 3 லட்சத்திற்கும் அதிகமான படித்த பட்டதாரிகள் இருக்கும் நிலையில் இப்பகுதியில் ஐடி துறை முதலீடுகளைக் கொண்டு வரவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் NEO TIDEL Park உருவாக்கப்பட்டது.

பிள்ளையார்பட்டி-க்கு அருகில் சுமார் 3.4 ஏக்கரில் 55000 சதுரடியில் அமைக்கப்பட்ட NEO TIDEL Park மூலம் தற்போது பல ஐடி மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தஞ்சாவூர்-ல் முதலீடு செய்து புதிய அலுவலகத்தை அமைக்கும் பணிகளைத் துவங்கியது.
இந்த நியோ டைடவ் ஐடி பூங்கா துவங்கி 24 மணிநேரத்திற்கு அனைத்து அலுவலகங்களும் முழுமையாக புக் செய்யப்பட்டு நிரம்பியுள்ளது. இங்கு பல்வேறு ஐடி சேவை நிறுவனங்கள், சுகாதார தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கோ வொர்கிங் ஸ்பேஸ் இடங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் பல திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் தஞ்சாவூர் பகுதியை நோக்கி வருகின்றனர்.
TIDEL நியோ-ஐடி பூங்காவில் இருக்கும் முக்கிய நிறுவனங்கள்:
Hamly Business Solutions India Ltd: 7,511 சதுர அடி
Startup TN: 3,974 சதுர அடி
Inforios Software Technologies: 3,279 சதுர அடி
Omega Health Care: 33,000 சதுர அடி
Namma Office co-working: 3,200 சதுர அடி
Habib Technologies: 3,200 சதுர அடி
Leads: 3,000 சதுர அடி
Pegt Engineering: 3,500 சதுர அடி
Prophecy Technologies: 3,000 சதுர அடி
ஐடி துறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, TIDEL நியோ-ஐடி பூங்காவின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் இதை 3.4 ஏக்கர் நிலத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி மாநிலத்தின் முக்கியமான ஐடி மையமாகத் தஞ்சாவூர்-ஐ மாற்ற உதவும்.
ஐடி துறையின் வளர்ச்சிக்கு ஏதுவாக தற்போது தஞ்சாவூரில் பயணிகள் விமான முனையும் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. விமானப் போக்குவரத்து வசதி மற்றும் வளர்ந்து வரும் ஐடி துறை ஆகியவற்றின் காரணமாகத் தஞ்சை நகரம் நவீனமயமாகி பொருளாதார வளர்ச்சியை அடைய உள்ளது.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications