தமிழ்நாட்டின் 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட மாவட்டங்கள், நகரங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது அதிலும் குறிப்பாகக் கொங்கு மண்டலம், மத்திய தமிழ்நாடு மாவட்டங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பத் தேர்வாக உள்ளது.
இப்படி தஞ்சாவூர் மாவட்டம் கடந்த 5 வருடத்தில் பல வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஸ்டார்ட்அப், ஐடி, உள்கட்டமைப்பு என பல பிரிவில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டுக்குச் சென்னை, கொங்கு மண்டலத்தைத் தாண்டி மத்திய தமிழ்நாடும் முக்கிய வளர்ச்சி இன்ஜின் ஆக மாறியுள்ளது.

நியோ டைடல் பார்க்: தஞ்சாவூர் தாலுகாவில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்ட நியோ டைடல் பார்க்-ன் கட்டுமான பணிகள் முடிவில் விரைவில் திறக்க தயார் நிலையில் உள்ளது. இதன் மூலம் தஞ்சாவூர் பகுதியில் இருக்கும் ஸ்டார்ட்அப் மற்றும் டெக் நிறுவனங்களைத் தாண்டி சிறு நகரங்களுக்குப் படையெடுக்கும் பெரிய டெக் நிறுவனங்களுக்கு முக்கிய தேர்வாக உள்ளது.

தஞ்சாவூர் நியோ டைடல் பார்க் சுமார் 3.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் 55,000 சதுர அடி அலுவலக இடத்துடன் கட்டமைக்கப்பட்டு உள்ளது. ஸ்டார்ட்அப்கள் மற்றும் ஐடி நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் G+3 தளங்களைக் கொண்ட மினி ஐடி பூங்காவாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெறும் 1.8 கி.மீ தொலைவிலும், மீனாட்சி மருத்துவமனை (1.4 கி.மீ) மற்றும் தமிழ் பல்கலைக்கழகம் (1.7 கி.மீ) போன்ற முக்கிய இடங்களுக்கு அருகில் இந்த தஞ்சாவூர் நியோ டைடல் பார்க் அமைந்துள்ளது.
நியோ டைடல் பார்க் என்பது, டைடல் பார்க்கின் சிறிய வடிவமாகும். ஆரம்ப கட்ட ஐடி நிறுவனங்கள் செயல்படுவதற்கு வேண்டிய வசதிகளைக் கொண்ட பூங்காக்கள் "டைடல் நியோ பார்க்" என்று அழைக்கப்படுகின்றன. டைடல் நியோ பார்க் என்பது 50000 சதுரடி முதல் 1 லட்சம் சதுரடி வரையிலான இடத்தில் அமைக்கப்படுபவை. இந்த நியோ டைடல் பார்க் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு புதிய அடையாளத்தையும், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளையும் கொடுக்க உள்ளது.

லாங்கவால் மால்: தஞ்சாவூரில் மாபெரும் ஷாப்பிங் மால் அமைய உள்ளது. "லாங்வால் மால்" (Langval Mall) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஷாப்பிங் மால் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ஜூலை 10 ஆம் தேதி சாப்ட்லான்ச் அதாவது பூஜை மற்றும் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு நடக்க உள்ளது. இதுவே மத்திய தமிழ்நாட்டின் முதல் ஷாப்பிங் மால் ஆகும்.
இந்த மால்-ஐ தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் TRB ராஜா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மால் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.
டிரோன் ஸ்டார்ட்அப்: சமீபத்தில் தமிழ்நாட்டின் முன்னணி SAAS நிறுவனமான ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தஞ்சாவூரில் அமைந்துள்ள யாளி ஏரோஸ்பேஸ் (Yali Aerospace) என்ற ட்ரோன் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முதலீடு செய்தது மூலம் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மேப்-பில் தஞ்சாவூர் பிரபலமானது.
யாளி ஏரோஸ்பேஸ் (Yali Aerospace) நிறுவனத்தை தினேஷ் பாலுராஜ் மற்றும் அனுக்கிரஹா என்ற கணவன் - மனைவி ஜோடி இணைந்து நடத்தி வருகின்றனர். நெதர்லாந்தில் இருந்து தங்கள் சொந்த ஊரான தஞ்சாவூருக்குத் திரும்பி இந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications