இந்தியாவின் மகேந்திரா நிறுவனத்தின் தார் வகை கார்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தார் ராக்ஸ் (Thar Roxx) காரின் கார் மாடலின் முதல் காரை 1.31 கோடி ரூபாய் கொடுத்து ஒருவர் ஏலத்தில் வாங்கி இருக்கிறார்.
மகேந்திரா நிறுவனம் அண்மையில் தான் தங்களுடைய மகேந்திரா நிறுவனத்தின் தார் 3 டோர் கார் மாடலை 5 டோர் காராக மேம்படுத்தியது. இதற்கு தார் ராக்ஸ் என பெயரிட்டு அண்மையில் தான் அறிமுகம் செய்தது. கடந்த மூன்றாம் தேதி தான் மகேந்திரா நிறுவனம் இந்த காருக்கான முன்பதிவினை தொடங்கியது. முன்பதிவுக்கான பணிகள் தொடங்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்திலேயே 1.76 லட்சம் கார்களுக்கான பதிவு வந்தது.

இதனிடையே மகேந்திரா நிறுவனம் தங்களுடைய தார் ராக்ஸ் கார் மாடலின் முதல் காரினை (VIN 001) ஏலத்தில் விடுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தத. இந்த முதல் காருக்கான ஏலம் ஆன்லைன் வாயிலாக கடந்த செப்டம்பர் முதல் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சுமார் 10980 பேர் பதிவு செய்தனர். இந்த முதல் காரை வாங்க பலரிடையே கடுமையான போட்டி நிலவியது.
இதனால் ஏலம் நடைபெறும் தளமும் ஆரவாரமாக காணப்பட்டது. 25 லட்சம் ரூபாய்க்கு தொடங்கப்பட்ட ஏலமானது இறுதியில் 1. 31 கோடியில் முடிவடைந்தது.
இந்த காரினை 1.31 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தவர் யார் என்ற விவரத்தை மகேந்திரா நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கிறது.

தார் ராக்ஸ் கார் மாடலின் முதல் காரினை ஏலத்தில் எடுத்தவர் மிண்டா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆகாஷ் மிண்டா ஆவார். தற்போது முதல் கார் அவருக்கு டெலிவரி வழங்கப்பட்டதற்கான புகைப்படம் வெளியாகியுள்ளது. மகேந்திரா நிறுவனத்தின் சிஎம்ஓவாக இருக்கும் மஞ்சரி உபத்தியாய், ஆகாஷ் மிண்டாவிடம் தார் ராக்ஸின் முதல் காருக்கான சாவியை ஒப்படைத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
மகேந்திரா நிறுவனம் இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த கூடுதல் தொகையை அவர்களுக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த முதல் காரில் மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திராவின் கையெழுத்து கொண்ட ஒரு ஸ்பெஷல் பேட்ஜ் மற்றும் VIN 001 என்ற பிளேட்டும் இடம் பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது.

மகேந்திரா நிறுவனத்தின் தார் மாடலை 2020 ஆம் ஆண்டு முதலில் நான் தான் வாங்கினேன், அதன் மேம்படுத்தப்பட்ட தார் ராக்ஸின் முதல் காரையும் நானே வாங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது என ஆகாஷ் மிண்டா தெரிவித்துள்ளார். நெபுலா ப்ளூ நிற காரை அவர் தேர்வு செய்துள்ளார். இந்தியாவில் மகேந்திராவின் தார் ராக்ஸ் காரின் விலை 13 லட்சத்திலிருந்து 23 லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Written by: Devika
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications