அங்கிட்டு இருந்த ஜெனரல் எலக்ட்ரிக், சிஸ்கோ எல்லாம் எங்கடா.. 20 வருடத்தில் பெரும் மாற்றம்..!

உலக வரலாற்றிலேயே கடந்த 25 வருடத்தைப் போல் வேகமாக வளர்ச்சி மற்றும் மாற்றங்களைக் கண்டது இல்லை என்பது தான் உண்மை. கடந்த 20 வருடத்தில் பல பொருட்கள் தேவையற்ற ஒன்றாக மாறியுள்ளது, அதேபோல் அரிதாக இருந்த பல விஷயம் தற்போது அனைவராலும் தினமும் பயன்படுத்த வருகிறது. தொலைவில் இருக்கும் விஷயங்கள் அனைத்தும் தற்போது கையெட்டும் தூரத்தில் உள்ளது.

இவ்வளவு பெரிய மாற்றம் நடந்திருக்கும் வேளையில் வர்த்தகமும், நிறுவனங்களின் ஆதிக்கத்தில் பெரும் மாற்றம் ஏற்படாதா என்ன..?

டாப் 10 பட்டியல்

டாப் 10 பட்டியல்

உலகளவில் அதிக மதிப்புடைய நிறுவனங்களின் டாப் 10 பட்டியலில் இருக்க வேண்டும் என்ற தாகம் அன்று முதல் இன்று வரையில் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக வர்த்தகச் சந்தையில் ஒரு நிறுவனத்தின் விற்பனை, தேவை ஆகியவற்றின் அடிப்படையில் தான், நிறுவனமும் பெரியதாகும், அதேபோல் அதன் மதிப்பும் அதிகரிக்கும்.

சந்தை மதிப்பீட்டு

சந்தை மதிப்பீட்டு

இதை அடிப்படையாக வைத்து தான் முதலீட்டுச் சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கு விலை அடிப்படையாக வைத்து சந்தை மதிப்பீட்டைக் கணக்கிடப்படுகிறது.

அந்த வகையில் 2001ஆம் ஆண்டில் சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரிய நிறுவனமாக இருந்த நிறுவனங்கள் எது தெரியுமா..?

2001 நிலவரம்

2001 நிலவரம்

2001ஆம் ஆண்டில் சந்தை மதிப்பீட்டின் படி டாப் 10 பட்டியலில் இருந்த நிறுவனங்கள் இதுதான்.

ஜெனரல் எலக்ட்ரிக்
சிஸ்கோ
எக்ஸான்
பைசர்
மைக்ரோசாப்ட்
வால் மார்ட்
சிட்டி குரூப்
வோடபோன்
இன்டெல்
ராயல் டச்சு ஷெல்

 

2021 டாப் 10 நிறுவனங்கள்

2021 டாப் 10 நிறுவனங்கள்

அப்படியே 20 வருடம் முன்னோக்கி இன்றைய சந்தை நிலவரத்தின் படி பார்த்தால் டாப் 10 பட்டியலில்

ஆப்பிள்
மைக்ரோசாப்ட்
ஆல்பபெட்
அமேசான்
பேஸ்புக்
டெஸ்லா
பெர்க்ஷயர் ஹாத்வே
டிஎஸ்எம்சி - தைவான் செமிகண்டக்டர்
டென்சென்ட்
என்விடியா (Nvidia)

2001 பட்டியலில் ஓரே ஒரு நிறுவம் தான் இடம்பெற்று உள்ளது. காலத்தின் வேகத்தில் இந்த மாற்றும் மிகப்பெரியதாக உள்ளது.

டெஸ்லா நிறுவன

டெஸ்லா நிறுவன

சமீபத்தில் டெஸ்லா நிறுவன பங்குகள் 902 டாலர் வரையில் உயர்ந்து இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 900 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை பெற்றது. இந்த அளவீட்டை ஒவ்வொரு நிறுவனத்திற்கும் எவ்வளவு காலம் ஆனது தெரியுமா..?!

டெஸ்லா : 18 வருடம், 3 மாதம்
கூகுள் : 21 வருடம், 2 மாதம்
அமேசான் : 24 வருடம், 0.5 மாதம்
ஆப்பிள் : 41 வருடம், 7 மாதம்
மைக்ரோசாப்ட் : 43 வருடம், 11 மாதம்

கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி

இதேபோல் தற்போது உலக நாடுகளில் மிகவும் பிரபலமான முதலீடாக இருக்கும் கிரிப்டோகரன்சியிலும் 2013க்கும் 2021க்கும் இடையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

2013ல் சந்தை மதிப்பீட்டின் படி

பிட்காயின்
லிட்காயின்
பிபிகாயின்
நேம்காயின்
ஃபெதர்காயின்
டெர்ராகோயின்
டெவ்காயின்
ஃப்ரீகாயின்
நோவாகாயின்
CHNகாயின்

2021 கிரிப்டோ நிலவரம்

2021 கிரிப்டோ நிலவரம்

பிட்காயின்
எதிரியம்
பைனன்ஸ் காயின்
கார்டானோ
டெதர்
சோலானா
ரிப்பிள்
போல்கடாட்
USDC
டோஜ்காயின்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+