இந்தியாவில் உணவுத் துறையில் ஏகப்பட்ட போட்டிகள் இருந்தாலும் ஹால்திராமின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ராஜஸ்தானின் பிகானரில் ஒரு சிறிய இனிப்புக் கடையாகத் தொடங்கிய ஹால்திராம் தொழில் இந்திய பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளில் புதிய படைப்பை தந்தது. உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஒரு மாற்றத்தை ஹால்திராம் உருவாக்கியது. சுவையான புஜ்ஜியா, சேவு என பல வகைப்பட்ட பலகாரங்களை தந்தது.
ஹால்திராமின் நிலையான சுவை வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. உணவு துறையில் நிறைய அனுபவம் படைத்த அகர்வால் குடும்பம் ஆறு தலைமுறைகளாக பல்வேறு தயாரிப்புகளை தயாரித்து விற்றது. ஹால்திராம் நிறுவனம் இப்போது ரூ.7000 கோடி மதிப்புள்ள நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஹால்திராம்ஸ், ஹால்திராம்ஸ் பிரபுஜி, பிகானர்வாலா, பிகாராம் சந்தாமல், பிகாஜி, பிகானோ ஆகிய பிராண்டுகளில் பொருட்களை தயாரித்து விற்று வருகிறது.

குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றாலும் அகர்வால் குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகள் சூழ்ந்தன. இருப்பினும் பலகாரத் தயாரிப்பில் பல பிரீமியம் பொருட்களை உருவாக்கியது. ராஜஸ்தானை சேர்ந்த ஒரு இளம் வயது சிறுவன் கங்கா பிஷன் அகர்வால், ஹால்திராம் என செல்லமாக அழைக்கப்பட்டான். அவனது தந்தையின் புஜ்ஜியா தொழிலை கையிலெடுத்தான்.
கடலைமாவில் தயாரிக்கப்பட்ட சுவையான கார உணவான புஜ்ஜியா அவனால் மேலும் சிறப்பு பெற்றது. 1919-இல் ஹால்திராம் தனது தந்தையின் கையால் செய்த புஜ்ஜியா விரைவில் பிரபலமானது. இன்றைக்கு ஹால்திராம் நிறுவனம் ரூ.9000 கோடியை ஒரு ஆண்டுக்கு சம்பாதிக்கிறது. ஹால்திராமின் மூன்று பிள்ளைகளான மூல்சந்த், சத்யநாராயணன், ராமேஸ்வர்லால், மகள் சரஸ்வதி தேவி இணைந்து தொழிலை தொடர்ந்தனர்.
1950-இல் கொல்கத்தாவில் ஹால்திராம் தனது மகன்கள் சத்யநாராயணன், ராமேஸ்வர்லாலுடன் சேர்ந்து பிரபலமான ஹால்திராம் புஜ்ஜியாவாலாவை நிறுவினார். ஹால்திராமின் மூத்த பேரன் சிவ் கிஷண் இந்த பிராண்டை வளர்த்தார். 1960 முதல் 1990 வரை ஹால்திராமின் சாம்ராஜ்ஜியம் விரைவான வளர்ச்சியை பெற்றது. சத்யநாராயணன் ஹால்திராம் அண்டு சன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார்.
துரதிர்ஷ்டவசமாக அவரால் அவரது தந்தை அளவுக்கு வெற்றிபெற முடியவில்லை. இதனிடையே ராமேஸ்வர்லால் தனது சகோதரரை விட்டு விலகினார். இதனால் நிறுவனம் கொல்கத்தா மற்றும் பிகானிர் என பிரிந்தது.
1980-களில் சிவ் கிஷண் அகர்வால் தங்கை சரஸ்வதியுடன் சேர்ந்து மகாராஷ்டிராவின் நாக்பூரில் குறிப்பிட்ட அளவு வெற்றி பெற்றார். அதேவேளையில் மூல்சந்தின் மகன்கள் மனோஹர்லால், மதுசூதன் ஆகியோர் 1984-இல் புதுதில்லியில் தங்களது நிறுவனத்தை தொடங்கினர். பிகானிரில் மூல்சந்தின் மகன் சிவ் சந்த் வியாபாரம் செய்தார். அவர்களது தயாரிப்பும் பிகாஜி என்ற பெயரில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா பிரிவை நடத்திய பிரபுவும் அவரது சகோதரரும் ஹால்திராம்ஸ், ஹால்திராம் ஆகிய பெயரை தில்லியில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டனர். தில்லியில் வியாபாரம் செய்த மனோகர்லால், மதுசூதன் வெற்றிகரமாக ரூ.5000 கோடி அளவுக்கு பெருக்கினர். நாக்பூரில் சிவ் கிஷண் அகர்வால் ரூ.4000 கோடிக்கு வருவாயைப் பெருக்கினார். பிகானிரில் சிவ் ரத்தன் அகர்வால் தனது தொழிலை ரூ.1600 கோடிக்கு விரிவுபடுத்தினார்.
பிகாஜி அண்மையில் வெளியிட்ட ஐபிஓவில் தங்களது தொழிலை விரிவுபடுத்தினர். இன்றைக்கு அகர்வால் குடும்பத்தின் செல்வாக்கு உயர்ந்து காணப்படுகிறது. ஹால்திராம் பிராண்டு இந்தியக் குடும்பங்களில் பிரபலமாகி விட்டது. இந்தியாவில் சாதித்த தொழில்குடும்பங்களில் ஒன்றாக அகர்வால் குடும்பம் விளங்குகிறது.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications