சென்னை: Global Capability Centres எனப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய அலுவலகங்களில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்பவர்களின் சராசரி ஆண்டு ஊதியம் 18,000 அமெரிக்க டாலர்கள் முதல் 45,000 அமெரிக்க டாலர்கள் வரை இருப்பதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
ஏஎன்எஸ்ஆர் என்ற நிறுவனம் ஜிசிசி மையங்களில் பணிபுரிபவரிடம் அவர்களின் ஊதியம் தொடர்பான ஆய்வு நடத்தி அந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரையிலான பணி அனுபவம் கொண்ட மென்பொருள் பொறியாளர்களுக்கு 8,750 டாலர்கள் முதல் 27,500 டாலர்கள் வரை ஊதியம் கிடைக்கிறதாம். அதுவே நுழைவு நிலையில் இருந்து மூன்று ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்ட மென்பொருள் பொறியாளர்களுக்கு 7000 டாலர்கள் முதல் 14,000 டாலர்கள் வரை ஊதியமாக கிடைக்கிறது.

ஃப்ரண்ட் எண்ட் டெவலப்பர் (Front End Developer) பணிகளில் ஃபிரஷர் முதல் மூன்று ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டவர்களுக்கு 7000 டாலர்கள் முதல் 14,000 டாலர்கள் வரை ஆண்டு ஊதியம் கிடைக்கிறது. அவர்களின் பணி அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க ஊதியமும் அதிகரிக்கிறது. உதாரணமாக மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டவர்களுக்கு 27 , 500 டாலர்கள் வரை ஊதியம் கிடைக்கிறது .10 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் கொண்டவர்களுக்கு 45,000 டாலர்கள் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
இதனிடையே வரக்கூடிய ஆண்டுகளில் ஜிசிசி மையங்கள் அதிக அளவிலான ஃபிரஷர்களை பணிக்கு அமர்த்த இருப்பதாக இந்த நிறுவனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக தொழில்நுட்பம் சாராத பிற துறைகளில் ஃபிரஷர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. நிதி மேலாண்மை, மார்க்கெட்டிங், ஹெச்ஆர் உள்ளிட்ட துறைகளில் இந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
ஃப்ரண்ட் எண்ட் டெவலப்பர்களை (Front End Developer) போலவே பேக் எண்ட் டெவலப்பர்கள் (Back-End Developer) மற்றும் மொபைல் ஆப் டெவலப்பர்கள் (Mobile App Developers) உள்ளிட்டோருக்கும் நுழைவு நிலை ஊதியமாக 15,000 டாலர்களில் இருந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் பெரும்போது 52 ,000 டாலர்கள் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படுகிறது.
ஃபுல் ஸ்டேக் டெவலப்பர்ஸ் (Full-Stack Developers ) மற்றும் பைதான் டெவலெப்பர்ஸ் (Python Developers )ஆகியோருக்கும் ஜிசிசி மையங்கள் அதிக அளவிலான ஊதியத்தை வழங்குகின்றன. மெசின் லேர்னிங் இன்ஜினியர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் இருந்தால் 75 ஆயிரம் டாலர்கள் வரை ஆண்டு ஊதியம் கிடைக்கிறது. எனவே ஜிசிசி மையங்களில் வேலை வேண்டும் என நினைப்பவர்கள் இந்த பிரிவுகளில் திறன்களை வளர்த்து கொண்டால் வேலை நிச்சயம்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications