கடந்த பிப்ரவரி 18, 2020 அன்று சென்செக்ஸ் நான்காவது நாளாக தொடர்ந்து சரிவைக் கண்ட போதும் சரி, கடந்த பிப்ரவரி 24, 2020 அன்று ஒரே நாளில் 807 புள்ளிகள் சரிவைக் கண்ட போதும், சென்செக்ஸ் 40,000 என்கிற வலுவான லெவல்கள் உடைபட வாய்ப்பு இருப்பதாகவே சொல்லி இருந்தோம்.
நாம் பயந்தது போலவே, சென்செக்ஸ் இன்று தன் 40,000 என்கிற வலுவான லெவல் உடைபட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

நேற்று மாலை சென்செக்ஸ் 40,281 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,194 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. கேப் டவுனில் வர்த்தகமாகத் தொடங்கினாலும், அடுத்த சில நிமிடங்களில், சென்செக்ஸ் தன் இன்றைய நாளுக்கான குறைந்தபட்ச புள்ளிகளை நோக்கி சரியத் தொடங்கிவிட்டன. இன்றைக்கு அதிகபட்சமாக 39,888 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக 393 புள்ளிகள் சரிவைத் தொட்டு இருக்கிறது சென்செக்ஸ்.
நேற்று மாலை நிஃப்டி 11,797 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை நிஃப்டி 11,738 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 11,698 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக நிஃப்டி 99 புள்ளிகள் சரிவைச் சந்தித்து இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 03 பங்குகள் ஏற்றத்திலும், 27 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,993 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 638 ஏற்றத்திலும், 1,265பங்குகள் இறக்கத்திலும், 90 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
மும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-யில், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் மொத்த 1,993 பங்குகளில், 39 பங்குகளின் விலை 52 வார அதிக விலையிலும், 138 பங்குகளின் விலை 52 வார இறக்க விலையிலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
யெஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஏஷியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ், கெயில், ஹிண்டால்கோ, சன் பார்மா, இண்டஸ் இண்ட் பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications