டெல்லி: மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற இருக்கும் நிலையில் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
வழக்கமாக மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை படியை உயர்த்தும். ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை மத்திய அரசு வெளியிடும்.
கடந்த மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இது 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அப்போது தெரிவித்திருந்தது.

தற்போதைய சூழலில் மத்திய அரசு ஊழியர்கள் அவர்களுடைய அடிப்படை ஊதியத்திலிருந்து 50 சதவீதம் தொகையை அகவிலைப்படியாக பெறுகின்றனர். அதே போல ஓய்வூதியதாரர்கள் அவர்களின் அடிப்படை ஓய்வூதிய தொகையிலிருந்து 50 சதவீத தொகையை அகவிலை படியாக பெறுகின்றனர். ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் இன்றையதினம் நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
எனவே மத்திய அரசு ஊழியர்கள் அரசு தங்களுக்கு நல்ல செய்தியை வழங்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒருவேளை அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் இதன் மூலம் 1.15 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள். அகவிலைப்படி என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை தாண்டி பணவீக்கத்துக்கு ஏற்ப வழங்கப்படும் ஒரு தொகையாகும். ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு அகவிலைப்படி மாற்றங்களை அறிவிக்கிறது.
முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கான கூட்டமைப்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாவதில் ஏற்படும் தாமதம் குறித்து கவலை தெரிவித்தனர். இதனிடையே அரசு 3% வரை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் தான் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பினை அரசு வெளியிட்டது. அதே நடைமுறை நடப்பாண்டிலும் தொடரும் என்றும், ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டி அரசு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிடும் என ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications