டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி மத்திய அரசு ஊழியர்கள் 3 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வினை பெறலாம் என சொல்லப்படுகிறது.
முன்னதாக கடந்த அக்டோபர் 9ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போதே அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இது தொடர்பான எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இந்த சூழலில் தான் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு தொடர்பான தகவலை வெளியிட கூடும் என சொல்லப்படுகிறது.

மத்திய அரசு தற்போது ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் தொகையை அகவிலைப் படியாக வழங்குகிறது. இதனை 53 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வந்தாலும் அது ஜூலை மாதம் முதல் முன் தேதி இட்டு வழங்கப்படும்.
அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் இதன் மூலம் 1.15 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள். அகவிலைப்படி என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை தாண்டி பணவீக்கத்துக்கு ஏற்ப வழங்கப்படும் ஒரு தொகையாகும்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் தான் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பினை அரசு வெளியிட்டது. அதே நடைமுறை நடப்பாண்டிலும் தொடரும் என்றும், ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிடும் என ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
வழக்கமாக மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை படியை உயர்த்தும். ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை மத்திய அரசு வெளியிடும். கடந்த மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இது 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்பட்டது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications