உத்தராகண்ட் மாநிலத்தில் இந்தியாவின் நீளமான ரயில் சுரங்க பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மலைப் பாங்கான இந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைப்பது பல்வேறு சவால்கள் நிறைந்த பணியாக இருந்தது என இந்த பணியை மேற்கொண்டிருக்கும் ஆர்விஎன்எல் நிறுவனமும் எல்&டி நிறுவனமும் தெரிவித்துள்ளன.
மலை பிரதேசமான உத்தராகண்டில் நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்க பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 16 சுரங்கப்பாதைகள் 12 துணை சுரங்கங்கள் என மொத்தம் 213 கிலோமீட்டர் தொலைவிற்கு ரயில் சுரங்க பாதைகள் அமைக்கப்படுகின்றன , அதில் 195 கிலோ மீட்டர் தொலைவிலான பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்த திட்டத்தில் சவாலான பகுதியாக தேவ் பிரயாக் மற்றும் ஜனாசு இடையிலான ரயில் பாதை பார்க்கப்படுகிறது.

இங்கே மலையை குடைந்து 14.58 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்திய ரயில்வே துறை மேற்கொண்டிருக்கும் மிக சவாலான ஒரு பணியாக இது பார்க்கப்படுகிறது. அது மட்டும் இன்றி நாட்டின் மிக நீளமான ரயில் போக்குவரத்துக்கான சிறந்த பாதையாக இது கருதப்படுகிறது. இந்த சுரங்கப்பாதையை அமைக்கும் போது பல்வேறு சவால்களை சந்தித்ததாக எல்&டி நிறுவனம் கூறியிருக்கிறது.
இந்த சுரங்கப்பாதை அமைப்பதற்காக Tunnel Boring Machine எனப்படும் டிபிஎம் இயந்திரத்தை பயன்படுத்தியுள்ளனர். சிவா மற்றும் சக்தி என பெயரிடப்பட்ட இரண்டு இயந்திரங்களை பயன்படுத்தி மலையை குடைந்ததாக தெரிவித்துள்ளனர். சுரங்கப்பாதை அமைப்பதற்காக இந்த இயந்திரங்களைக் கொண்டு மலையை குடைந்த போது திடீரென அனைத்து பகுதிகளில் இருந்தும் நீர்வரத் தொடங்கியதாகவும் ஒரு நிமிடத்திற்கு 1500 லிட்டர்கள் என தண்ணீர் வந்து அந்த இடமே வெள்ளைக்காடாக மாறியது என்றும் இந்த திட்டத்திற்கான இயக்குனர் ராகேஷ் அரோரா தெரிவித்துள்ளார்.
மலையை குடைந்து 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு டிபிஎம் இயந்திரம் உள்ளே சென்றுவிட்டது, 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்த சூழலில் தான் வெள்ளம் ஏற்பட்டது. மேலும் அந்தப் பகுதியை இடிந்து விழக்கூடிய சூழல் கூட உண்டானது என கூறியுள்ளார். அந்த சமயத்தில் தாங்கள் சரியான முறையில் திட்டமிட்டு அதனை சரி செய்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.
பல்வேறு ரசாயனங்களையும் சிமெண்ட்களையும் பயன்படுத்தி சுற்றியுள்ள பாறைகளை வலுப்படுத்தி மேற்கொண்டு அந்த பகுதியில் தண்ணீர் வராமல் சரி செய்ததாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இது தவிர மலையை குடைந்து சுரங்கப்பாதை ஏற்படுத்தும் போது பாறைகளின் அழுத்தம் காரணமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் அவற்றை எல்லாம் கடந்து தான் நாட்டின் நீளமான ரயில் சுரங்கபாதை அமைத்திருப்பதாகவும் அரோரா கூறியுள்ளார்.
கடந்த 16ஆம் தேதி இந்த சுரங்கப்பாதையின் இறுதி கட்ட பணிகளை ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். மலைப்பகுதியில் நடைபெற்று வரும் இந்த பணி புவியியல் ரீதியாகவும் வானிலை ரீதியாகவும் பல்வேறு சவால்களை தங்களுக்கு தந்திருந்தாலும் அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறோம் என இந்த திட்டத்தில் பணியாற்றுவார்கள் தெரிவித்துள்ளனர்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications