பொதுவாக ஐடி நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரி பொறுப்பு தான் மிக முக்கியமானதாக கருதப்படும். ஆனால் அண்மை காலமாக CFO எனப்படும் தலைமை நிதி அதிகாரி பொறுப்புக்கான முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது. எனவே ஐடி நிறுவனங்களில் இந்த பொறுப்புகளில் யார் நியமிக்கப்படுகிறார் என்பது செய்திகளில் இடம்பிடித்து விடுகிறது.
கடந்த 12 மாதங்களில் மட்டும் இந்தியாவை சேர்ந்த பெரிய ஐடி நிறுவனங்களில் 9 நிறுவனங்களில் தலைமை நிதி அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஐடி நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் பெரிய மாற்றங்களை காண முடிகிறது.

முதலில் தலைமை செயல் அதிகாரிகள் திடீரென பதவி விலகுவது அல்லது நிறுவனத்தினாலயே மாற்றப்படுவது என்பன போன்ற செயல்கள் நடைபெற்று வந்த நிலையில் , தற்போது தலைமை நிதி அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
சில நிறுவனங்களில் ஓய்வு உள்ளிட்ட காரணங்களுக்காக தலைமை நிதி அதிகாரிகள் மாற்றப்பட்டு இருப்பதாக கூறும் துறை சார்ந்த நிபுணர்கள், சில நிறுவனங்கள் தலைமை நிதி அதிகாரியின் பொறுப்புகளிலேயே பெரிய மாற்றங்களை கொண்டு வந்து அதற்கேற்ற வகையில் ஆட்களை மாற்றி இருப்பதாக கூறுகின்றனர்.
அதாவது தலைமை நிதி அதிகாரி பொறுப்பு என்பது வெறுமனே அலுவலகத்தில் அமர்ந்து நிதி பொறுப்புகளை மட்டும் பார்ப்பது என்பதோடு மட்டும் இல்லாமல் நிறுவன செயல்பாடுகளுக்கு ஏற்ப நிதி ரீதியான முடிவுகளை எடுப்பது என அந்த பதவியின் பொறுப்புகள் பெருமளவில் மாற்றம் கண்டுள்ளது எனக் கூறுகின்றனர்.
குறிப்பாக தலைமை நிதி அதிகாரி பொறுப்புகளில் இருப்பவர்கள் தற்போது தொழில் நுட்ப ரீதியாகவும் அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கு முன்பு வரை பேக் ஆபிஸ் பொறுப்பாக கருதப்பட்ட தலைமை நிதி அதிகாரி பொறுப்பு தற்போது ஃப்ரண்ட் ஆபிஸ் பொறுப்பாக மாற்றப்பட்டுள்ளது என்றும் நிறுவனம் சார்ந்த முக்கியமான முடிவுகளை எடுக்கும் பொறுப்பு அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது என்றும் சர்வதேச தொழில் ஆய்வு நிறுவனமான ஹெச்எஃப்எஸ்- இன் தலைமை செயல் அதிகாரி பில் தெரிவித்துள்ளார்.
தற்போது பல்வேறு ஐடி நிறுவனங்களும் எப்படி தலைமை செயல் அதிகாரிகளை மிக கவனமாக தேர்வு செய்கின்றனவோ அதேபோல தலைமை நிதி அதிகாரிகளையும் மிக கவனமாக தேர்வு செய்கின்றன. அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை விப்ரோ, காக்னிசென்ட் , இன்போசிஸ், கோ ஃபோர்ஜ், எல்டிஐ மைண்ட்ரீ, ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய தலைமை நிதி அதிகாரிகளை மாற்றியுள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications