சென்னை: பல்வேறு நாடுகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கார்பன் வெளியீட்டை குறைக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கார்பன் வெளியீட்டை குறைக்க உதவும் ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து கோடிக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளார் ஒரு நபர்.
பந்த்வால் ஜெயந்த் பலிகா 76 வயதான இவர் சென்னையில் பிறந்தவர். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பயின்ற இவருக்கு 2024 ஆம் ஆண்டுக்கான மில்லினியம் டெக்னாலஜி விருது வழங்கப்பட்டுள்ளது. டெக்னாலஜி அகாடமி ஃபின்லாந்து வழங்கியுள்ள இந்த விருதுடன் அவருக்கு ஒரு மில்லியன் யூரோ பரிசு தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளது.

பலிகா கரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்சுலேட்டட் கேட் பைபோலார் ட்ரான்சிஸ்டர் (insulated gate bipolar transistor (IGBT)) கண்டுபிடித்தவர். இது ஒரு செமி கண்டக்டர் பவர் ஸ்விட்ச் ஆகும்.
இது ஏசி, ஃபிரிட்ஜ், எரிவாயுவில் இயங்கக்கூடிய வாகனங்கள், ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்களில் மிகப் பொதுவாக பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியாகும். இவர் முதன் முதலில் 1980 களில் இதனை அறிமுகம் செய்தார். இதன் மூலம் சர்வதேச அளவில் கார்பன் வெளியீடு என்பது கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இவருடைய இந்த ஒரு கண்டுபிடிப்பின் மூலம் மட்டும் 88 கிகா டன்கள் கார்பன் டை ஆக்சைடு வெளியீடு குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய இந்த வெற்றிக்கும், இந்த கண்டுபிடிப்புக்கும் தனக்கு கிடைத்த ஆரம்ப கால கல்வியே காரணம் என பலிகா டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் சுட்டிக் காட்டியுள்ளார். அதாவது ஐஐடி மெட்ராஸில் தனக்கு கிடைத்த கல்வியும், தொடர் பயிற்சியும் தான் தன்னை இவ்வளவு பெரிய கண்டுபிடிப்பை உருவாக்க ஊக்குவித்தது எனக் கூறியுள்ளார். தன்னுடைய இத்தனை ஆண்டுகால பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இப்படி ஒரு விருது தனக்கு கிடைத்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மில்லினியம் டெக்னாலஜி விருது 2004 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. முதன் முதலில் இந்த விருது World Wide Web உருவாக்கிய டிம்பர்னஸ் லீ தான் இந்த விருதினை பெற்றார் . சென்னையில் பிறந்த பலிகா 10 வயது வரை டெல்லியில் வளர்ந்தார். பின்னர் பெங்களூருக்கு சென்ற அவர் அங்கே இருந்த பிஷப் காட்டன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
ஐஐடி மெட்ராஸில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் இளநிலை படிப்பு முடித்த இவர் 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தார். அங்கே நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மேல்நிலைப் படிப்பினை முடித்தார். இவரது தந்தை விட்டால் பலிகா ஆல் இந்தியா ரேடியோவின் முதல் தலைமை பொறியாளர் ஆவார். தன்னுடைய தந்தையே தனக்கு ரோல் மாடல் என பலிகா பெருமிதமாக கூறுகிறார்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications