அவதார் திரைப்படம் சினிமா உலகின் அடுத்தப் பரிணாம வளர்ச்சிக்குக் கொண்டு சென்ற ஒன்று, கனவு உலகை நிஜமாக விர்ச்சுவலில் உருவாக்கும் ஒரு பிரம்மாண்ட முயற்சியாக இருந்தது மட்டும் அல்லாமல் சினிமா CG-யில் புதிய இலக்கணத்தை உருவாக்கிய ஒரு படம்.
ஜேம்ஸ் கேமரூன் கைவண்ணத்தில் அவதார் முதல் பாகம் 2009ல் வெளியான போது இதுவரை உலக மக்கள் பார்த்திராத ஒரு புதிய பாண்டோரா உலகத்தைக் காட்டி பிரமிக்க வைத்த நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பின் மக்களை மீண்டும் பிரமிப்பில் ஆழ்த்த வேண்டும் என்று பெரு மெனக்கெடல் உடன் அவதார் 2 - அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைக்கு வந்துள்ளது.
இந்தப் படத்தின் வெற்றிக்கு கதை, திரைக்கதை எந்த அளவிற்கு முக்கியமோ, அதைவிட முக்கியம் கிராபிக்ஸ். அப்படி இந்த அவதார் 1, 2 ஆம் பாகங்களின் வெற்றிக்கு முழு முக்கியக் காரணம் என்றால் Weta FX என்ற ஒரு நிறுவனம் தான். இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
ஜேம்ஸ் கேமரூன்
ஜேம்ஸ் கேமரூன் 1997 ஆம் ஆண்டு டைட்டானிக் படத்தை முடிந்த உடன் தயாரிக்க வேண்டிய படம், ஆனால் அதற்கான டெக்னாலஜி இல்லாத காரணத்தால் 1994ல் 80 பக்க கதையுடன் துவங்கிய அவதார் பயணம் 2005ல் நாவி மக்களின் மொழியை உருவாக்கும் பணியில் தீவிரமாக இறங்கினார், 2006ல் ஸ்கிரீன்ப்ளே மற்றும் அவதார் உலகை கட்டமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது.
மோஷன் கேப்ஷரிங்
அவதார் மோஷன் கேப்ஷரிங் எனும் டெக்னாலஜி முறையில் பின்பு அதை முழுமையாக அனிமேஷன் செய்யப்பட்டது. இந்த இடத்தில் தான் மொத்த படமும் உருவானது என்றால் மிகையில்லை. அவதார் முதல் மற்றும் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாக மிகப்பெரிய அளவில் விசுவல் எபெக்ட்ஸ் பணிகளைச் செய்த Weta FX என்ற நிறுவனம் தான்.
Weta FX நிறுவனம்
இந்த நிறுவனத்தை உருவாக்கியது யார் தெரியுமா..? எப்போதும் ஒரு தேவை தான் மாற்றத்தைக் கொண்டு வரும், அந்த வகையில் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் போன்ற பல பிரம்மாண்ட படங்களை டைரக்ட் செய்த பீட்டர் ஜாக்சன் தான் Weta FX நிறுவனத்தை உருவாக்கியது.
பீட்டர் ஜாக்சன்
1993 ஆம் ஆண்டுப் பீட்டர் ஜாக்சன் தன்னுடைய Heavenly Creatures என்ற திரைப்படத்திற்குத் தேவையான விசுவல் எபெக்ட்ஸ் பணிகளுக்கான நியூசிலாந்து நாட்டில் உருவாக்கிய சிறு நிறுவனம் தான் இன்று பூதாகரமாக வளர்ச்சி அடைந்துள்ளது. அவதார் 2 - அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தின் 400 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் பெரும் பகுதி Weta FX பெற்றுள்ளது.
பிரேம் அக்கராஜு
Weta FX ஹாலிவுட் முதல் கோலிவுட் வரையில் பல திரைப்படங்களுக்கு விசுவல் எபெக்ட்ஸ் பணிகளைச் செய்துள்ளது. இந்த மாபெரும் நிறுவனம் சிஇஓ-வாக 2022 மே மாதம் வரையில் இருந்தது ஒரு இந்தியர். பிரேம் அக்கராஜு இவர் அமெரிக்காவில் பிறந்தாலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
யார் இந்தப் பிரேம் அக்கராஜு
Weta FX நிறுவனத்தின் சில பிரிவுகளை 2021ல் யூனிடி டெக்னாலஜிஸ்-க்கு விற்பனை செய்யப்பட்டது, இதைத் தொடர்ந்து பிரேம் அக்கராஜு The Screening Room என்ற நிறுவனத்தைத் தனியாகத் திறந்தார். இதனால் Weta FX நிறுவனத்தின் சிஇஓ பதவை ராஜினாமா செய்தாலும். Weta FX நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரர் மற்றும் தலைவராக உள்ளார். 2020ல் Weta FX நிறுவனத்தில் சேர்ந்தார் பிரேம் அக்கராஜு.
1500 ஊழியர்கள்
பீட்டர் ஜாக்சன் உருவாக்கி இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரேம் அக்கராஜு வழிநடத்தும் Weta FX நிறுவனத்தில் சுமார் 1500-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுவரை விசுவல் எபெக்ட்ஸ் பணிகாகச் சுமார் 34 விருதுகளை உலக அரங்கில் பெற்றுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications