திருப்பூர்: தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக தமிழகத்தில் பெரு நகரங்களில் டைடல் பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை சென்னை உள்ளிட்ட நகரங்களின் அடையாளமாகவும் மாறி இருக்கின்றன.
இந்நிலையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் டைடல் பார்க் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 39 கோடி ரூபாய் செலவில் 7 அடுக்கு கட்டிடமாக இந்த மினி டைடல் பூங்காவை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருப்பூரில் நடைபெற்று வரும் டைடல் பூங்கா கட்டுமான பணியின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. திருப்பூர் நகருக்கு அருகே திருமுருகன்பூண்டி பகுதியில் இந்த மினி டைடல் பூங்கா கட்டப்பட்டு வருகிறது.
எட்டு தளங்களைக் கொண்ட இந்த கட்டிடம் மொத்த 66,139 சதுர அடி அலுவலக பரப்பளவைக் கொண்ட மிகப்பெரிய கட்டிடமாக அமைந்துள்ளது. இதன் ஒவ்வொரு தளமும் சுமார் 6500 சதுர அடி பரப்பளவை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கட்டுமான பணிகளின் புகைப்படங்கள் தான் தற்போது அப்டேட்டாக வெளியிடப்பட்டுள்ளது.

வரும் புத்தாண்டு தொடக்கத்திலேயே இந்த டைடல் பூங்கா கட்டுமான பணிகள் நிறைவு பெற்று முதலமைச்சர் இதனை திறந்து வைப்பார் என சொல்லப்படுகிறது. தமிழ்நாடு இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி டெவெலப்மென்ட் கார்ப்பரேஷன் என்பதன் சுருக்கம் தான் டைடல் பூங்கா என அழைக்கப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே சென்னை , கோவை உள்ளிட்ட இடங்களில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற டைடல் பூங்காக்களில் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய அலுவலகத்தை நிறுவும். இதன் மூலம் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலைவாய்ப்பு உருவாகும். எனவே தான் தமிழ்நாடு அரசு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகளை தீவிர படுத்தியுள்ளது.

இதனை நியோ டைடல் பார்க் என்றும் மினி டைடல் பார்க் என்றும் தமிழ்நாடு அரசு அழைக்கிறது. பொதுவாக இந்த வகையான டைடல் பூங்காக்கல் 50,000 சதுர அடி முதல் 1 லட்சம் சதுர அடி வரையிலான இடத்தில் அமைக்கப்படும். ஏற்கனவே சேலம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார்.
Story Written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications