இந்தியாவின் முக்கிய தொழிலதிபரான ரத்தன் டாடாவின் மறைவு அவர் வளர்த்த செல்ல நாய்குட்டி முதல் அரசியல் தலைவர்கள், கார்ப்ரேட் தலைவர்கள் வரையில் பலரும் இரங்கல் தெரிவித்தது மட்டும் அல்லாலம் நேரில் வந்து பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். அவர் வளர்த்த செல்ல நாய்க்குட்டி கோவா கலந்து கொண்டு அவரின் உடலின் அருகிலேயே படுத்திருந்தது, கீழே இறங்க மறுத்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் டாடா குழும தலைவராக ரத்தன் டாடா பதவியேற்ற பின்னர் பல வகையில் விரிவாக்கம் அடைந்தது, இருந்தாலும் இந்த இடைப்பட்ட காலத்தில் சில சர்ச்சைகளையும் டாடா குழுமம் சந்தித்தது. இதைப்பற்றி தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

1.நானோ பிரச்சனை: 2006 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூர் பகுதியில் டாடா நிறுவனம் தங்களுடைய கனவு திட்டமான நானோ கார் உற்பத்தி ஆலையை அமைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் 2007 ஆம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சி அமைத்த மம்தா பானர்ஜி நானோ கார் உற்பத்தி ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கே மிகப் பெரிய வன்முறை ஏற்பட்டது. இதனை அடுத்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேற்குவங்க மாநிலத்தில் அமைய இருந்த தங்களுடைய நானோ கார் ஆலையை குஜராத்துக்கு இடமாற்றம் செய்தது. இந்த போராட்டங்கள் காரணமாக டாடா நிறுவனம் தங்களுடைய நானோ கார்களை உற்பத்தி செய்து உரிய தேதியில் விற்பனைக்கு கொண்டு வருவதை தவறவிட்டு பெரும் தோல்வியை சந்தித்தது.
2. சைரஸ் மிஸ்திரி விவகாரம்: 2012இல் டாடா சம்ஸ் குழுமத்தில் ஒரு பங்குதாரராக இருந்த பலோஞ்சி மிஸ்திரி குழுமத்தின் சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தின் தலைமை பொறுப்பை ஏற்றார். ஆனால் தொடக்கம் முதலே சைரஸ் மிஸ்திரிக்கும் டாடா குழுமத்திற்கும் பிரச்சனைகள் இருந்த வண்ணமே இருந்தன. இந்த நிலையில் தான் 2016 ஆம் ஆண்டு டாடா சன்ஸ் குழுமம் திடீரென சைரஸ் மிஸ்திரியை தலைமை பொறுப்பிலிருந்து நீக்கியது.அப்போது சைரஸ் மிஸ்திரி சார்பில் டாடா குழும செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது மிகப்பெரிய சர்ச்சையாக அப்போது பேசப்பட்டது.
3. நஸ்லி வாடியா விவகாரம்: பாம்பே டையிங் நிறுவன தலைவர் நஸ்லி வாடியா மற்றும் ரத்தன் டாடா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஆனால் 2016 ஆம் ஆண்டு சைரஸ் மிஸ்திரி பிரச்சனையின் போது இருவரின் நட்பும் பிரியும் நிலைக்கு வந்தது. நஸ்லி வாடியா சைரஸ் மிஸ்திரிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததன் காரணமாக டாடா சன்ஸ் நிறுவனம் டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா கெமிக்கல் நிறுவனங்களின் வாரிய குழு உறுப்பினர் பதவியில் இருந்து நஸ்லி வாடியாவை நீக்கியது. எனவே டாடா குழுமத்தின் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். பிரச்சினையை பேசி தீர்க்கும் படி நீதிமன்றம் கூறியதால் அவர் வழக்கினை திரும்ப பெற்றார்.
4. டாடா டேப்ஸ்: 1997ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஒரு சர்ச்சை மிகுந்த டாடா டேப்ஸை வெளியிட்டது. அதாவது அந்த சமயத்தில் அசாம் மாநிலத்தில் அரசுக்கு எதிரான அமைப்புகளுக்கு உதவும் வகையில் டாடா நிறுவனம் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நடைபெற்ற டெலிபோன் உரையாடல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது.
5. நீரா ராடியா விவகாரம்: 2010 ஆம் ஆண்டு கார்ப்பரேட் லாபியான நீரா ராடியாவுக்கும் பல்வேறு தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், செய்தியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே நிகழ்ந்த டெலிபோன் உரையாடல்கள் வெளியாகின. ராடியா டேப் என இது அறியப்பட்டது. அப்போது ராடியா ரத்தன் டாடாவிடம் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியானது. இதன் பின்னர் டாடா குழுமம் நீதிமன்றம் சென்று ஊடகங்கள் தங்கள் பெயரை இத்துடன் இணைத்து பேசுவதற்கு தடை வாங்கியது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications