இந்தியாவின் 130 கோடி மக்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து அளிக்க வேண்டும் என்றால் பல ஆயிரம் கோடி ரூபாய்ச் செலவாகும். இந்தச் செலவுகளை அரசே முழுமையாக ஏற்குமா..? அல்லது மக்கள் தடுப்பு மருந்து பெறப் பணம் செலுத்த வேண்டுமா? என்ற கேள்வி நிலவுகிறது.
Recommended Video

இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ஆக்ஸ்போர்டு கோவிட் வேக்சின் மருந்தை மத்திய அரசு மற்றும் மருத்துவ நிபுணர் குழு அவசரகால அடிப்படையில் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த மருந்தை மக்களுக்குச் செலுத்த நாடு முழுவதும் ஒத்திகை நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பு மருந்து
ஒவ்வொரு நாடுகளிலும் கொரோனா தடுப்பு மருந்தின் விலை மாறுபடும், இதேபோல் இந்தியாவில் தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் கொரோனா மருந்தின் விலை மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும் என இந்தியாவில் ஆக்ஸ்போர்டு கோவிட் வேக்சின் தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனவாலா தெரிவித்துள்ளார்.
3 டாலர் விலை
இந்நிலையில் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கொரோன தடுப்பு மருந்தின் விலை 3 டாலர் அதாவது 220 ரூபாய் விலையைக் கொண்டு உள்ளது. கொரோனாவில் இருந்து ஒருவர் முழுமையாகத் தங்களைக் காத்துக்கொள்ள 2 முறை தடுப்பு மருந்தைப் பெற்ற வேண்டும்.
57,200 கோடி ரூபாய்
இந்த வகையில் 440 ரூபாய் வீதம் நாட்டின் 130 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த சுமார் 57,200 கோடி ரூபாய்ச் செலவாகும். இதில் உள்கட்டமைப்பு, போக்குவரத்து, இதர செலவுகள் என எதுவும் சேர்க்கப்படவில்லை என ஆதர் பூனவாலா தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருளாதாரம்
2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுக் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை அதிகளவில் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், மத்திய அரசுக்கான வரி வருமானம் அதிகளவில் குறைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் அரசு கூடுதல் சுமையை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காகச் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத் திட்டங்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிச்சந்தையில் மருந்து விலை
இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து தனியார் துறைக்கும் வரும் பட்சத்தில் இதன் விலை 700 முதல் 800 ரூபாய் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் துறைக்கு வரும் நிலையில் அரசு உதவி இல்லாமல் மக்கள் பணத்தைச் செலவு செய்து தடுப்பு மருந்தைப் பெற வேண்டும்.
இலவச கொரோனா தடுப்பூசி
பொருளாதார வீழ்ச்சி, நிதி நெருக்கடி மத்திய அரசு உதவி என அனைத்து பிரச்சனைகளையும் தாண்டில் இந்தியாவில் சுமார் 7 மாநிலங்கள் கொரோனா தடுப்பு மருந்தை தனது மாநில மக்களுக்கு இலவசமாகச் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இலவச கொரோனா மருத்து அறிவிப்பு வெளியிட்டுள்ள 7 மாநிலங்கள் : கேரளா, பீகார், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா, அசாம் மற்றும் பாண்டிச்சேரி
30 கோடி மக்கள்
இந்தியாவில் அடுத்த 6 முதல் 8 மாத காலத்தில் மத்திய அரசு சுமார் 30 கோடி மக்களுக்குக் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு இருந்த அனைவரும் முதலில் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற உள்ளனர்.
உலக நாடுகள் கோவேக்ஸ் உலகளாவிய தடுப்பு மருந்துப் பகிர்வு திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட அளவிலான நிதியுதவியைப் பெறுகிறது.
கோவேக்ஸ் திட்டம்
உலக நாடுகள் கோவேக்ஸ் உலகளாவிய தடுப்பு மருத்துப் பகிர்வு திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட அளவிலான நிதியுதவியைப் பெறுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் முதல்கட்ட கொரோனா தடுப்பு மருந்துக்காகக் கோவேக்ஸ் உதவிகளைத் தாண்டி மத்திய அரசு சுமார் 1.4 பில்லியன் டாலர் முதல் 1.8 பில்லியன் டாலர் அளவிலான தொகையைச் செலவு செய்ய வேண்டும் என GAVI அமைப்பு தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications