இந்தியாவில் ஒரு காலத்தில் எட்டெக் துறை பெயர் சொல்லும் அளவுக்கு புகழ் பெறத் தொடங்கியது. பலரும் இந்த துறையின் வளர்ச்சியைப் பார்த்து வியந்தனர். ஆனால் சமீபத்திய ஆண்டுகளாக எட்டெக் துறை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2148 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக டிராக்ஸ்கன் நிறுவனம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றுநோய் காலத்தில் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. நீண்ட நாட்கள் லாக்டவுன் போடப்பட்டதால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அந்த சமயத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சியை கண்ட எட்டெக் தளங்கள், தொற்றுநோய் காலத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் நிதி தட்டுப்பாடு, மாறிவரும் சந்தை தேவைகள் மற்றும் செயல்பாட்டு சவால்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன.

வெளியான தரவுகளின் படி இந்த எட்டெக் ஸ்டார்ட் அப்கள் 2021-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 3.6 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது. ஆனால் 2024-ஆம் ஆண்டில் இந்த நிறுவனங்களின் வருவாய் 0.64 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
எட்டெக் துறையில் வெற்றி பெற ஒரு நிறுவனம் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்களை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும். இதில் புதுமையான யோசனைகளை செயல்படுத்துவதும் முக்கியம். பல எட்டெக் நிறுவனங்கள் பாரம்பரிய முறையில் வகுப்பறை பயிற்சி மற்றும் பொதுவான கற்றல் பொருட்களை மட்டுமே நம்பி இருந்தன. இதனால் மாறிவரும் தொழில்நுட்பம் மற்றும் சந்தை தேவைகளுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியாமல் போனது. இதன் காரணமாகவே பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்று edForce நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான ரவி கக்லாசாரியா கூறியுள்ளார்.
டிராக்ஸ்ன் ஃபீட் ஜியோ அறிக்கையின் படி எட்டெக் துறை 2021-ஆம் ஆண்டில் உச்சத்தில் இருக்கும்போது 4.1 பில்லியன் டாலர் நிதி திரட்டியது. 2021-ஆம் ஆண்டு எட்டெக் துறைக்கு அதிக நிதி திரட்டப்பட்ட ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு அதிக நிதி திரட்டப்பட்ட காலாண்டாக இருந்தது. அந்த காலாண்டில் மட்டும் 2.48 பில்லியன் நிதி திரட்டப்பட்டது. அதோடு 2021-ஆம் ஆண்டில் பெங்களூர், டெல்லி, மும்பை, ஹைதராபாத், நொய்டா போன்ற பகுதிகளில் மொத்தமாக 16,028 நிறுவனங்கள் நிறுவப்பட்டன.
லாக்டவுன் முடிந்து மீண்டும் வகுப்பறைகள் திறக்கப்பட்டதும், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை குறைந்து போனது.. இதனால் இந்தத் துறையின் வளர்ச்சி சரியத் தொடங்கியது. சமீபத்தில், ஜெரோதா நிறுவனத்தின் நிறுவனரான நிதின் காமத் ஆதரவுடன் செயல்பட்டு வந்த கல்வித் தளமான "Stoa School", மூடப்படுவதாக அறிவித்தது. சமீபத்தில் திறன் மேம்பாடு மற்றும் வேலை தேடல் தளமான ப்ளூலெர்ன் 2024-ஆம் ஆண்டில் அதன் செயல்பாடுகளை நிறுத்தியது.
மூடப்பட்டதாக கூறப்படும் பிற ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் குவிஸ் மைண்ட், வேது அகாடமி மற்றும் ட்ரைபக் ப்ளூ போன்ற நிறுவனங்களும் அடங்கும். ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தவிர, இந்தத் துறையில் உள்ள முக்கிய நிறுவனங்களும் தாக்கத்தை உணர்ந்துள்ளன. ஒரு காலத்தில் $22 பில்லியன் மதிப்புடைய நிறுவனமாக இருந்த பைஜூஸ், பல சுற்று பணிநீக்கங்கள், மறுசீரமைப்பு நடவடிக்கைகள், கடன் சிக்கல்கள் மற்றும் சட்ட சிக்கல்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications