திருப்பதி லட்டு விவகாரம்: தேசிய பால்வள அறிக்கையில் சொல்லப்படுவது என்ன..? - முழு விவரம்

திருப்பதி: இந்தியாவில் தற்போது திருப்பதி லட்டு விவகாரம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தை தயாரிக்க பயன்படுத்தம் நெய்யில் பன்றி உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பதி பெருமாள் கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டுவை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கொழுப்பு இருப்பதை மத்திய அரசின் ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கால்நடை மற்றும் உணவு ஆய்வு நிறுவனம் குஜராத்தில் செயல்பட்டு வருகிறது.

 திருப்பதி லட்டு விவகாரம்: தேசிய பால்வள அறிக்கையில் சொல்லப்படுவது என்ன..? - முழு விவரம்

இந்த நிறுவனம் திருப்பதி பெருமாள் கோயில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யை ஆய்வு செய்தது. லட்டு தயாரிக்க குறைந்த தரம் கொண்ட நெய் பயன்படுத்தப்படுவதாக வெளியான புகாரை அடுத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் நீர் மற்றும் உணவு மதிப்பாய்வு ஆய்வகம் நெய் மாதிரிகளை கடந்த ஜூலை 12ஆம் தேதி மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் நெய்யை ஆய்வு செய்து தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த முடிவில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .அதாவது இந்த அறிக்கையின் படி இந்த மாதிரிகளில் கண்டறியப்பட்ட எஸ் வேல்யூ என்பது நிர்ணயம் செய்யப்பட்ட வரம்புகளை விட அதிகமாக இருக்கிறது. அப்படி எனில் இந்த நெய்யில் சோயாபீன் ஆயில், சன் ஃபிளவர் ஆயில், பாமாயில் மற்றும் மீன் எண்ணெய், மாட்டு இறைச்சி அல்லது பன்றிக் கொழுப்பு போன்றவற்றின் தடயங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

பொதுவாக தூய்மையான பாலின் கொழுப்பில் எஸ் வேல்யூ என்பது 98.05 முதல் 104.32 வரையில்தான் இருக்க வேண்டும் ஆனால் இந்த மாதிரிகளை சோதனை செய்ததில் அதில் எஸ் வேல்யூ 117.42 வரை இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கண்டுபிடிப்புகள் இருந்த போதிலும் பசுக்களுக்கு அதிக அளவு தாவர எண்ணெய்களை கொண்டிருக்கும் உணவு வழங்கியது அல்லது ஒரு குறிப்பிட்ட பிரித்தெடுப்பு முறைகளை பயன்படுத்துவது போன்ற சில காரணிகளும் இதுபோன்ற தவறான நேர்மறைகளுக்கு வழிவகுக்கும் என தேசிய பால்வளத்துறை அறிக்கை குறிப்பிட்டுள்ளது .

கொழுப்பை அகற்றுதல் அல்லது பிரித்தெடுப்பது போன்ற தொழில்நுட்ப நடைமுறைகள் மற்றும் Gerber அல்லது Schmid-Bondzynski-Ratalaff போன்ற முறைகளை பயன்படுத்தி பிரித்தெடுக்கப்பட்ட நெய் போன்றவையும் இது போன்ற துல்லியமற்ற நேர்மறை எண்களுக்கு பங்களிக்கலாம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

முன்னதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட சுமார் 20,000 கிலோ நெய் தரம் குறைந்தது என கண்டறியப்பட்டது. ஒருவேளை இந்த நெய் தான் இப்படி விலங்குகளின் கொழுப்பினை கொண்டு இருந்ததா? என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதனிடையே இந்த நெய்யினை வழங்குவதற்கான ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட இருப்பதாகவும் திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் தெரிவிக்கிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+