வெளிநாட்டு படிப்பு: கனவுக்காக கடன் வலையில் சிக்கி தவிக்கும் கேரள குடும்பங்கள்..!

திருவனந்தபுரம் , கேரளா: இந்தியாவிலேயே அதிகமான மாணவர்கள் வெளிநாடு சென்ற படிக்கும் ஒரு மாநிலமாக கேரளா திகழ்ந்து வருகிறது. இதற்காக கல்விக்கடன் வாங்குவதிலும் கேரளா முதலிடத்தில் இருக்கிறது.

இப்படி தங்களுடைய பிள்ளைகளின் வெளிநாட்டு படிப்பு கனவுக்காக கேரள குடும்பங்கள் பல லட்சங்களை கடன்களாக சுமந்து கொண்டு வேதனைப்படுவது தெரியவந்துள்ளது. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி கேரள மாநிலத்தில் 2024 டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிலவரத்தின் படி 9,387 கோடி கல்வி கடன்கள் செலுத்தப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. மொத்தம் 2,57,669 கல்வி கடன் கணக்குகள் அந்த மாநிலத்தில் இருப்பதாக தெரிவிக்கிறது.

வெளிநாட்டு படிப்பு: கனவுக்காக கடன் வலையில் சிக்கி தவிக்கும் கேரள குடும்பங்கள்..!

இதில் குறிப்பாக வெளிநாடு சென்று கல்வி பயில்வதற்காக வாங்கப்பட்ட கடன்கள் என பார்க்கும்போது இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் வெளிநாடு படிப்புக்காக அதிக அளவில் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 2019 ஆம் ஆண்டிலிருந்து 2024 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் தான் வெளிநாட்டு படிப்புக்காக 11,872 கோடி ரூபாய் கல்வி கடனாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் இருக்கிறது .மகாராஷ்டிராவில் 8,745 கோடி, ஆந்திராவில் 7,690 கோடி ரூபாயும் தெலுங்கானா மாநிலத்தில் 8,150 கோடி ரூபாயும் வெளிநாட்டு படிப்புக்கான கல்வி கடனாக வழங்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு கடன்களை வாங்கி வெளிநாடு செல்லக்கூடிய கேரள மாணவர்கள் நல்ல வேலை வாய்ப்புடன் திரும்ப வந்து அந்த கடன்களை செலுத்துகிறார்களா என பார்த்தால் பெரும்பாலான மாணவர்களுக்கு எதிர்பார்த்த சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை என பெற்றோர் புலம்புகின்றனர். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள இந்த செய்தியின் படி கொச்சியை சேர்ந்த ஒரு கைம்பெண் தன்னுடைய முதல் மகனின் வெளிநாட்டு படிப்புக்காக பல லட்சங்களை கடனாக வாங்கி திரும்ப செலுத்த முடியாமல் படாத பாடுபட்டு இருக்கிறார். 2010 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் மகன் லண்டனில் சென்று படிக்க வேண்டும் என்பதற்காக 20 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி இருக்கிறார். 2015 ஆம் ஆண்டில் அவர் திரும்ப செலுத்தும் போது 20 லட்சம் ரூபாய் கடனுக்கு வட்டியோடு சேர்த்து அவர் 50 லட்சம் ரூபாயாக செலுத்தியிருக்கிறார்.

பின்னர் 2016 ஆம் ஆண்டில் மீண்டும் தன்னுடைய மகனின் முதுநிலை படிப்புக்காக 35 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி இருக்கிறார் இந்த கடனுக்காக அவர் மீண்டும் 50 லட்சம் ரூபாயை செலுத்தி இருக்கிறார்கள் .அதாவது தன்னுடைய மகனின் மேற்படிப்புக்காக மட்டும் இவர் ஒரு கோடி ரூபாயை கடனாக செலுத்தியிருக்கிறார். தன்னுடைய மகனுக்கு நல்ல வேலை கிடைத்ததால் தன்னால் கடனை திரும்ப செலுத்த முடிந்தது எனக் கூறும் அவர் என்னைப்போல பல பெற்றோர் கடனை வாங்கிவிட்டு திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர் என கூறுகிறார்.

கேரளாவை சேர்ந்த பல்வேறு மாணவர்களும் வெளிநாட்டில் வேலை தேடி சென்று வேலை கிடைக்காமல் விசா காலாவதியாகி மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பக் கூடிய நிலைதான் இருக்கிறது என பெற்றோர் வருத்தம் தெரிவிக்கின்றனர். கேரளாவில் இவ்வாறு கல்வி கடன்கள் திரும்ப செலுத்தப்படாமல் நிலுவையில் இருக்கும் மதிப்பு ஆண்டுதோறும் உயர்ந்து வருவதாக வங்கி துறையை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வங்கிகள் தற்போது தாங்கள் வழங்கிய கடனை திரும்ப பெறுவதற்காக அடகு வைத்த சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+