ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகளுக்கு மத்தியில், உக்ரைனுக்கு ரூ.32,033 கோடி நிதியுதவியை ஐரோப்பிய ஒன்றிய ஆணையங்களின் தலைவர் ursula leyen வழங்கினார்.
உக்ரைன் - ரஷ்யா இடையே, 2014 முதல் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், 2022 பிப்., 24ல் உக்ரைன் மீது வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை ரஷ்யா துவங்கியது. இதையடுத்து துவங்கிய போர் மூன்றாண்டுகளாக நீடித்து வருகிறது. மூன்றாம் ஆண்டு நிறைவடைந்த நாளான கடந்த 24ம் தேதி பல்வேறு உலக தலைவர்கள் உக்ரைன் தலைநகர் கீவ்வில் குவிந்தனர். அந்தவகையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா, வட ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஸ்பெயின் பிரதமர்கள் உள்ளிட்டோர், உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காக கீவ் நகருக்கு வந்தனர்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'இந்த போரில், உக்ரைனின் தலைவிதி மட்டுமல்ல; ஐரோப்பாவின் தலைவிதியும் ஆபத்தில் உள்ளது' என, குறிப்பிட்டுள்ளார். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், தங்கள் முயற்சிகளை மறு ஆய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நடத்திய சிறப்பு உச்சிமாநாட்டில் பேசிய ஐரோப்பிய ஒன்றிய ஆணையங்களின் தலைவர் ursula leyen, உக்ரைனின் நெருக்கடியான வரவுசெலவுத் திட்டத்தில் கூடுதல் பணப்புழக்கத்தை செலுத்தவும், அதன் உள்நாட்டுத் தொழில்துறையிலிருந்து இராணுவ உபகரணங்களை வாங்குவதை எளிதாக்கும் வகையிலும், 3.5 பில்லியன் யூரோக்கள்(ரூ.32,033 கோடி) மதிப்புள்ள ஐரோப்பிய ஒன்றிய நிதி உதவித் தொகுப்பை வெளியிட்டார்.
€3.5 பில்லியன் என்பது ஐரோப்பிய ஒன்றியம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுவிய €50 பில்லியன் மதிப்புள்ள உதவித் தொகை எனப்படும் "the Ukraine Facility"-க்கான முன்பணமாகும் என்றும் குறிப்பிட்டார். மேலும், இந்த ஆண்டு முழுவதும் உக்ரைனின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரம் Brussels-ஆல் முடிந்தாலும், கோடைக்குப் பிறகு ஆயுதங்களை வழங்குவது நிச்சயமற்றதாகவே உள்ளது. "ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை உடனடியாக வழங்குவதை நாம் விரைவுபடுத்த வேண்டும். மேலும் இது வரும் வாரங்களில் எங்கள் பணியின் மையமாக இருக்கும்," என்று வான் டெர் லேயன் கூறினார்.


Click it and Unblock the Notifications