கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் அடையாளமாக இயங்கி வந்த டிராம் சேவையை நிறுத்துவதாக மேற்கு வங்க மாநில அரசு அறிவித்துள்ளது. கொல்கத்தா என்றாலே நினைவுக்கு வரும் விஷயங்களில் டிராம் சேவைகளும் ஒன்று.
இங்கே 1873 ஆம் ஆண்டு டிராம் போக்குவரத்து முதன்முறையாக தொடங்கப்பட்டது. கொல்கத்தா செல்பவர்கள் அனைவருமே இந்த டிராம் சேவையை பயன்படுத்தாமல் திரும்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு இது புகழ்பெற்றதாக இருக்கிறது.

இந்த நிலையில் 150 ஆண்டுகளாக இயங்கி வரும் டிராம் சேவையை நிறுத்துவதற்கு மேற்குவங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. 1873 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி டிராம் சேவையை ஆங்கிலேயர்கள் கொல்கத்தாவில் அறிமுகம் செய்தனர்.
இந்த டிராம் சேவை அப்போது கொல்கத்தாவில் முக்கியமான ஒரு போக்குவரத்து முறையாக மாறியது. கொல்கத்தா மட்டுமில்லாமல், பாட்னா, சென்னை, நாசிக் மற்றும் மும்பை போன்ற நகரங்களிலும் ஆங்கிலேயர்கள் டிராம் சேவையை அறிமுகம் செய்தனர்.
ஆனால் பின்னாளில் இங்கெல்லாம் இவை படிப்படியாக குறைந்துவிட்டன. தற்போது கொல்கத்தா தவிர எங்கேயும் பயன்பாட்டில் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சி முடிந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் கொல்கத்தாவில் மட்டுமே டிராம் சேவை பயன்பாட்டிலேயே இருந்து வந்தது.
குறிப்பாக கொல்கத்தாவை சுற்றி பார்க்க வேண்டும் என விரும்புபவர்கள் பெரும்பாலும் டிராம்களையே பயன்படுத்துவார்கள். இந்த நிலையில் குறைந்த வேகத்தில் டிராம்கள் இயங்குவதாலும் மக்கள் அதிவேக பயணத்தை விரும்புவதாலும் அதன் சேவையை நிறுத்த இருப்பதாக மேற்குவங்க மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவின் எஸ்பிளனேடில் இருந்து மைதான் செல்லும் ஒரு வழியைத் தவிர போக்குவரத்து பிரச்சனைகள் காரணமாக டிராம் சேவை நிறுத்தப்படுகிறது என கூறியுள்ளார். ட்ரான் சேவை நிறுத்தம் குறித்து சமூக ஊடகங்களில் பலரும் கருத்து பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக கொல்கத்தாவின் பாரம்பரிய அடையாளமாக இருக்கும் ட்ராம் சேவைகளை நிறுத்தக்கூடாது என்றும் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறுவது ஏற்றதல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.
1873 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு கொல்கத்தாவில் முதன்முறையாக டிராம்களை அறிமுகம் செய்த போது குதிரைகளை கொண்டு தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்படும் டிராம்கள் தான் பயன்பாட்டில் இருந்தனவாம். பின்னர் இது படிப்படியாக இயந்திரங்கள் மூலமே ஓடத் தொடங்கியது.
முதலில் நீராவி மூலமும் பின்னர் மின்சார எஞ்சின்கள் மூலமும் இயக்கப்பட்டன. 2013 ஆம் ஆண்டு மேற்குவங்க மாநில அரசு குளிர்சாதன வசதி கொண்ட ட்ராம்களை அறிமுகம் செய்தது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications