இந்தியாவின் முதல் விமானி, பாரத ரத்னா வாங்கிய ஒரே தொழிலதிபர்.. யாரு சாமி நீங்க..?

இந்தியாவின் முதல் விமானி, இந்திய தொழில்துறையின் முன்னோடி, 8 மணி நேர வேலையை அறிமுகம் செய்தவர் என பல்வேறு புகழுக்கு சொந்தக்காரர் தான் ஜேஆர்டி டாடா. இந்தியாவில் பாரத ரத்னா விருது பெற்ற தொழில்துறை சார்ந்த ஒரே நபர் இவர்தான். Jehangir Ratanji Dadabhoy Tata சுருக்கமாக அனைவரும் இவரை ஜேஆர்டி டாடா என அழைக்கின்றனர். ஜூலை 29ஆம் தேதி இவரது 120 ஆவது பிறந்தநாள் ஆகும்.

இந்தியாவில் விமான போக்குவரத்து துறையின் தந்தை இவர். தற்போது இந்தியாவில் விமான சேவைகளை வழங்கி வரக்கூடிய ஏர் இந்தியா நிறுவனம் இவரால் தொடங்கப்பட்டது தான். ஜேஆர்டி டாடாவுக்கு 5 வயது முதலே விமானங்கள் மீது காதல் உண்டு.

 இந்தியாவின் முதல் விமானி, பாரத ரத்னா வாங்கிய ஒரே தொழிலதிபர்.. யாரு சாமி நீங்க..?

கோடைகால விடுமுறைக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் விமானங்களை பார்ப்பதில் விமானங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை தெரிந்து கொள்வது இவருக்கு அதிக ஆர்வம் இருந்து.

முதன் முதலில் அடால்ப் பெகோட் விமானத்தில் ஆங்கில கால்வாயை கடந்த நிகழ்வை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய 15 வது வயதில் தான் ஒரு விமானியாக வேண்டும் என்ற முடிவினை எடுத்தார் தன்னுடைய 24 ஆவது வயதில் விமானி உரிமத்தை பெற்றார்.

ஜேஆர்டி டாடாவுக்கு முன்பாக பலர் விமானம் ஓட்டும் உரிமத்திற்கு பதிவு செய்திருந்த போதிலும் இந்த சோதனையில் வெற்றி பெற்று முதன்முறையாக இந்தியாவில் விமானம் இயக்குவதற்கான உரிமம் பெற்றவர் ஜேஆர்டி டாடா தான். 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி இந்தியாவின் முதல் சான்றிதழ் பெற்ற விமானியானார் இவர். அதே ஆண்டில் இந்தியாவின் முதல் விமான சேவை நிறுவனமான டாடா ஏர் சர்வீஸ் நிறுவனத்தை தொடங்கினார். பின்னாளில் அது ஏர் இந்தியா என பெயர் மாற்றம் பெற்றது.

தன்னுடைய உரிமத்தை பயன்படுத்தி டாடா ஏர் சர்வீஸ் நிறுவனத்தின் முதல் விமானத்தை இயக்கினார். 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி இந்தியாவின் முதல் விமானம் பறக்கத் தொடங்கியது. அதனை இயக்கியவர் ஜேஆர்டி டாடா. டாடா குழுமத்தில் ஜேஆர்டி டாடாவின் தலைமையின் கீழ் 14 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், டாடா சால்ட், டாடா குளோபல் பிவேரேஜஸ், டைட்டன் என பல்வேறு நிறுவனங்களை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

அதேபோல நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சாதகமான கொள்கைகளைக் கொண்டு வந்த ஒரு தலைவர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே பணி செய்தால் போதும், ஊழியர்களுக்கு இலவசமாக மருத்துவ பராமரிப்பு சேவைகளை வழங்க வேண்டும், ஊழியர்கள் விபத்தில் இறக்கும் போது அவர்களுக்கு நிறுவனம் சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கியமான கொள்கைகளை தன்னுடைய நிறுவனத்தில் அமல்படுத்தியவர் ஜேஆர்டி டாடா. ஏர் இந்தியா நிறுவனத்தை அரசு கைப்பற்றிய போதிலும் ஜேஆர்டி டாடாவே அதன் தலைவராக நீடித்தார்.


Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+