இன்றெல்லாம் பெரும்பாலான கடன் வழங்குனர்கள், கடன் பெறுபவர்களிடம் ஜாமீன் கையெழுத்து போடும் ஒருவரை பரிந்துரைக்க கேட்கின்றனர். ஜாமீன் கையெழுத்து என்பது கடன் பெறுநர் கடனைத் திருப்பி செலுத்தாத பட்சத்தில், கடன் தொகையை செலுத்துவதற்கு பொறுப்பாவார் என்பதை தீர்மானிக்கும் பொருட்டு போடப்படும் கையெழுத்தாகும். இது கடன் வழங்குனர்களுக்கு அதிக நம்பிக்கையையும் பாதுகாப்பையும் வழங்குகிறது.
கடன் பெறுபவர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பது, தகுதிக்கு அதிகமாக கடன் பெறுவது, அல்லது கடன் விண்ணப்பங்களுக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் கீழ் இருப்பது போன்ற காரணங்களால் கடன் வழங்குனர்கள் ஜாமின் கையெழுத்து போடுபவரை கோருகின்றனர். இது போன்ற சூழ்நிலைகளில் ஒருவர் ஜாமின் கையெழுத்து போடலாமா? அப்படி போட்டால், கையெழுத்து போட்டவருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்? என்ற தகவல்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

கடனை திருப்பிச் செலுத்துவதற்கு பொறுப்பு: கடன் பெறுபவரை போலவே ஒருவர் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டால், அவரும் கடனை திருப்பி செலுத்துவதற்கு முழு பொறுப்பாவார். ஒரு வேலை கடன் பெறுபவர்.. அது தனிநபர் பெற்ற கடனாக இருந்தாலும் சரி அல்லது ஜாயின்ட் லோன் ஆக பெறப்பட்டிருந்தாலும் அவர்கள் சரிவர கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் ஜாமின் கையெழுத்து போட்டவரிடம் வங்கிகள் கடனை வசூலிக்கும். அத்துடன் ஜாமின் கையெழுத்து போட்டவர் கடனைத் திருப்பிச செலுத்தவில்லை என்றால் அதற்கு அபராதங்களும் விதிக்கப்படலாம்.
எனவே கடன் பெறுபவர் லோன் இன்சூரன்ஸ் பெற்றிருக்கிறாரா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை கடன் பெற்றவர் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டால் ஜாமீன் கையெழுத்து போட்டவருக்கான திருப்பி செலுத்தும் சுமையை இந்த காப்பீடு குறைக்கும்.
தனிநபர்கள் ஜாமீன்தாரர்களாக செயல்படும்போது, அவர்கள் யாருக்காக கையெழுத்து போட்டார்களோ அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால் சமமான பொறுப்பு ஜாமின்தாரர்களுக்கும் உண்டு. இதன் விளைவாக கிரெடிட் ஸ்கோர் குறையலாம். கடன் பெறாமல் வெறும் ஜாமின் கையெழுத்து மட்டும் போட்டவர்கள் எதிர்காலத்தில் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். ஒருவருடைய கிரெடிட் ஸ்கோரை வைத்து தான் கடன் தரலாமா அல்லது வேண்டாமா என்பதை நிர்ணயிக்கும்.
கடன் பெறுவதில் தாக்கம்: ஒருவர் ஜாமின் கையெழுத்து போட்டு விட்டால் ஏற்கனவே கடன் பெற்றவரின் கடனும் ஜாமின்தாரரின் கடனாக கருதப்படும். இதன் காரணமாக ஜாமின் போட்டவர் எதிர்காலத்தில் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். உதாரணமாக ஒருவருக்கு இவ்வளவுதான் கடன் வழங்க முடியும் என்று வங்கிகள் தீர்மானித்திருக்கும். அந்த கடன் வரம்பிற்குள் ஏற்கனவே ஒருவருக்கு ஜாமின் கையெழுத்து போட்டு விட்டால், ஜாமின்தாரருக்கு தேவை ஏற்படும் போது கடன் பெற முடியாத சூழல் ஏற்படலாம்.
எனவே கையெழுத்து போடுவதற்கு முன்பு நீங்கள் கையெழுத்து போடுபவர் சரியாக பணத்தை திருப்பி செலுத்துவாரா? இதனால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா? பாதுகாப்பிற்காக மட்டுமே உங்கள் கையெழுத்தை கேட்கிறாரா? என்ற விவரங்களை எல்லாம் தெரிந்து கொண்டு அதன் பின்னர் செயல்பட வேண்டும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications