பெண்கள் வெறும் கனவு காண்பதற்காக அல்ல, அவற்றை நிஜமாக மாற்றவும் பிறந்தவர்கள். தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் கொண்டு, அவர்கள் பல துறைகளில் புரட்சிகளை ஏற்படுத்தி, உலகத்தை மாற்றி வருகின்றனர். சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், பெண்கள் தொழில் முனைவுத்துறையில் (Entrepreneurship) பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளனர். தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில், பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப்-கள் (Startups) புதிய மாற்றங்களை உருவாக்கி வருகின்றன.
பெண்கள் தொழில் தொடங்குவதில் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். முதலீடு (Investment) பெறுவதில் சிரமம் கொள்கிறார்கள், சமுதாய எதிர்பார்ப்புகளை மேற்கொள்கிறார்கள், மேலும், அவர்களுக்கு குடும்ப பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையின்மை மற்றும் மனஅழுத்தம் போன்ற பல போராட்டங்களை கடந்து, அவர்கள் சாதனை படைத்து வருகின்றனர். பலரும் ஸ்டார்ட்அப் (Startup) துறையில் நுழைந்து, புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம் சமூக மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர்

தொழில்நுட்பம், இன்று உலகை மாற்றும் மிக முக்கியமான துறை. பல பெண்கள், டிஜிட்டல் துறையில் முன்னேறி, செயற்கை நுண்ணறிவு (AI), மென்பொருள் வளர்ச்சி, ஆன்லைன் பரிவர்த்தனைகள் (E-commerce) போன்ற பல துறைகளில் சாதனை படைத்துள்ளனர். இதில் 'ராதா வேம்பு' என்பவர் ஒரு இந்திய பில்லியனர் தொழிலதிபர் மற்றும் இந்திய மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான Zoho கார்ப்பரேஷனில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கிறார் .'Zoho Women in Tech' என்னும் நிறுவனம், பெண்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுகிறது. பெண்கள் திறமை மிக்கவர்களாக வளர்ந்து, உலகளாவிய சந்தையில் மிகப்பெரிய போட்டியாளர்களாக உருவாகி வருகின்றனர்.
கல்வி, ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை. பெண்கள், கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். ஆன்லைன் கல்வி (E-learning) மற்றும் தனிப்பயன் கல்வி முறைகள் (Personalized Learning) மூலம் மாணவர்களுக்கு உதவுகின்றனர். இதில் 'திவ்யா கோகுல்நாத் ' என்பவர் ஒரு இந்திய தொழில்முனைவோர் மற்றும் கல்வியாளர் ஆவார், இவர் 2011 ஆம் ஆண்டு இந்தியாவின் பெங்களூரில் நிறுவப்பட்ட கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநராக உள்ளார். 'Byju's Women Entrepreneurs' பெண்கள் முன்னோடியாக கல்வித் துறையில் புதிய விதமான டெக்னாலஜிகளை பயன்படுத்தி, மாணவர்களுக்கு உயர் தரமான கல்வியை வழங்குகின்றனர்
பெண்கள், சமூக சேவைகளிலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். பாலியல் கல்வி, பெண்களின் பாதுகாப்பு, சிறப்பு சமூக சேவைகள், வேலைவாய்ப்பு மேம்பாடு போன்ற துறைகளில் பல பெண்கள் முன்னணி இடங்களை பிடித்துள்ளனர். இதில் 'ஃபல்குனி நாயர்' 'Self-Help Women Startups' என்னும் நிறுவனத்தை வழி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், பெண்களுக்கு சிறு தொழில்களை தொடங்க உதவுகிறது. தையல், ஹேண்டிகிராஃப்ட், வீட்டில் இருந்து தொழில் செய்யும் முறைகள் போன்றவைகளை ஊக்குவிக்கிறது.
பெண்கள் தொழில் தொடங்குவதன் மூலம் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரிக்கிறது, சமுதாயத்தில் பெண்களின் தாக்கம் அதிகரிக்கிறது, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன, தொழில்நுட்பம் மற்றும் சமூக முன்னேற்றம் ஏற்படுகிறது.
பெண்கள் தொழில் தொடங்குவதில் மேலும் அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, Green Technology, AI & Robotics, Sustainable Fashion, Digital Marketing, Healthcare Innovations போன்ற துறைகள் எதிர்காலத்தில் பெரும் வளர்ச்சியடையும். இன்னும் பல பெண்கள், தங்கள் கனவுகளை நிஜமாக மாற்றி, உலகத்தையே மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்கள் தலைமையிலான இந்த ஸ்டார்ட்அப்புகள், பல்வேறு துறைகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி, சமூக முன்னேற்றத்தை முன்னெடுத்து வருகின்றன.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications