யுபிஐ, ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் கட்டணம்?.. மத்திய அரசு தீவிர ஆலோசனை

யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைகள் மற்றும் ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வணிக கட்டணங்களை மீண்டும் கொண்டுவருவதற்கான திட்டத்தை மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வணிக தள்ளுபடி விகிதம் (எம்டிஆர்) ரியல் நேரத்தில் பணம் செலுத்துவதற்கு வணிகரால் வங்கிக்கு இந்த கட்டணம் செலுத்தப்படுகிறது. அதேசமயம், யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைகள் மற்றும் ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு தற்போது எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசாங்கம் கடந்த 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் எம்டிஆர் கட்டணத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தது. அதுவரை வணிகர்கள் பரிவர்த்தனை தொகையில் 1 சதவீதத்துக்கும் குறைவாக வங்கிகளுக்கு எம்டிஆர் கட்டணத்தை செலுத்தி வந்தன. பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, இந்த பேமெண்ட்ஸை இலவமாக செயல்படுத்துவதற்கு வங்கிகள் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

யுபிஐ, ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் கட்டணம்?.. மத்திய  அரசு தீவிர ஆலோசனை

இருப்பினும், வங்கிகள் மற்றும் நிதிதொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, இந்த பரிவர்த்தனைகளை செயல்படுத்த போதுமான உள்கட்டமைப்பு செலவை ஈடுசெய்ய இந்த மானியம் போதுமானதாக இல்லை. மேலும் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், பேமெண்ட் மானியத்திற்காக ரூ.437 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. முந்தைய ஆண்டில் பேமெண்ட் மானியத்திற்காக ரூ.3,500 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது யுபிஐ சில்லரை பேமண்ட் முறையாக மாறிவிட்டதாலும், ரூபே பிரபலமடைந்ததாலும் முழுமையான தள்ளுபடியை நிறுத்தலாம் என வங்கிகள் நினைக்கின்றன.

பெரிய வணிகங்ளுக்கான யுபிஐ வரிவர்த்தனைகளில் எம்டிஆர் கட்டணத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான விண்ணப்பத்தை மத்திய அரசுக்கு வங்கிகள் அனுப்பியுள்ளன. வங்கிகள் அனுப்பிய பரிந்துரையில், ஜிஎஸ்டி அடிப்படையில் ஆண்டு வருவாய் ரூ.40 லட்சத்துக்கு மேல் உள்ள வணிகர்களுக்கு எம்டிஆர் கட்டணத்தை மீண்டும் விதிக்கலாம். வணிகத்தின் அளவை பொறுத்து, பெரிய வணிகர்கள் அதிக கட்டணத்தையும், சிறிய வணிகர்கள் குறைந்த கட்டணத்தையும் செலுத்தும் வகையில் அரசு யுபிஐக்கு ஒரு அடுக்கு விலை நிர்ணயம் செய்யலாம். ஆண்டு வருவாய் ரூ.40 லட்சத்துக்கும் குறைவாக உள்ள வணிகர்களுக்கு யுபிஐ தொடர்ந்து இலவசமாக வழங்கலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியாளர் ஒருவர் கூறுகையில், எங்களுடைய வாதம் என்னவென்றால், கார்டு எந்திரங்களை கொண்ட பெரிய வணிகர்கள் விசா மற்றும் மாஸ்டர்கார்டு டெபிட் கார்டுகள் மற்றும் அனைத்து வகையான கிரெடிட் கார்டுகள் போன்ற பிற பேமெண்ட் கருவிகளுக்கு எம்டிஆர் கட்டணம் செலுத்துகிறார்கள் என்றால், அவர்கள் ஏன் யுபிஐ மற்றும் ரூபே டெபிட் கார்டுகளுக்கு கட்டணங்களை செலுத்த முடியாது? என்று கேள்வி எழுப்பினார். ஆக, விரைவில் யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைகள் மற்றும் ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் எம்டிஆர் கட்டணம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story written: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+