தொடரும் தி கிரேட் ரெசிக்னேஷன்.. வேலை தேடுவோருக்கு இது ஒரு வரப்பிரசாதம்.. ஏன் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக முந்தைய ஆண்டுகளில் தாங்கள் இருக்கும் பணியில் இருப்போமா? அல்லது வெளியேற்றப்படுவோமா? அடுத்து என்னவாகும் என்ற அச்ச நிலை இருந்து வந்தது. குறிப்பாக ஐடி துறையில் எந்த நேரத்தில் வேலை பறிபோகுமோ என்ற சூழல் இருந்து வந்தது. ஆனால் இன்று அப்படியில்லை. இது தி கிரேட் ரெசிக்னேஷன் காலம் என்று கூறப்படுகின்றது.

 

நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்த காலம் போய் இன்று, ஊழியர்கள் மிகப் பெரிய அளவில் வெளியேறி வருகின்றனர்.

இது குறித்து டெலாய்ட்-ன் women@work 2022 என்ற குளோபல் அவுட் லுக் அறிக்கையில், பெண் ஊழியர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் அதிகளவில் வெளியேற திட்டமிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

 தி கிரேட் ரெசிக்னேஷன் காலம்

தி கிரேட் ரெசிக்னேஷன் காலம்

இது பெண் ஊழியர்கள் உடல் சோர்வு மற்றும் நெகிழ்வான நேரமின்மை காரணமாக தங்களது பணியிலிருந்து வெளியேற நினைப்பதாகவும் ஆய்வறிக்கையானது சுட்டிக் காட்டியுள்ளது. சர்வதேச அளவில் தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் அதிகளவில் ஊழியர்கள் நிறுவனங்களை விட்டு வெளியேறும் நிகழ்வு உள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் இது அதிகளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை டெலாய்ட் தி கிரேட் ரெசிக்னேஷன் என குறிப்பிட்டுள்ளது.

இது வரப்பிரசாதம்

இது வரப்பிரசாதம்

சிறந்த வேலை மற்றும் அதிகளவிலான சம்பளம் என தேடும் ஊழியர்களுக்கு இந்த கிரேட் ரெசிக்னேஷன் காலம் ஒரு மிகப்பெரிய வரப்பிரச்சாதமாக உள்ளது.

கொரோனாவின் பிடியில் இருந்து பொருளாதாரம் மீண்டும் வந்து கொண்டுள்ள நிலையில், வீட்டில் இருந்து பணிபுரியும் சூழலானது, ஊழியர்களுக்கு சிறந்த வாய்ப்பினை அணுக இன்னும் எளிதாக்கியுள்ளது. இது சம்பள விகிதத்தினையும் அதிகரிக்கிறது.

 

மன அழுத்தம் அதிகரிப்பு
 

மன அழுத்தம் அதிகரிப்பு


இந்த ஆய்வில் கிட்டதட்ட 56% பெண்கள் தங்களின் மன அழுத்தமானது கடந்த ஆண்டினை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பாதிக்கும் மேற்பட்டோர் மிக மனசோர்வை உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வறிக்கையானது கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரையில், 5000 பெண்களிடம் நடத்தப்பட்டது. இது 10 நாடுகளில் நடத்தப்பட்ட நிலையில், இந்தியாவிலும் 500 பெண்கள் இந்த ஆய்வில் பங்களித்துள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.

 

 இந்த நிறுவனமே வேண்டாம்

இந்த நிறுவனமே வேண்டாம்

இந்த ஆய்வில் பங்களித்துள்ள 40% பெண் ஊழியர்கள் தாங்கள் புதிய பணியினை தேடுவதற்கான காரணம் மன அழுத்தமே என்றும் கூறியுள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆய்வில் பங்களித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்களது நிறுவனத்தினை விட்டு வெளியேற விரும்புவதாகவும், வெறும் 9% பேர் மட்டுமே 5 ஆண்டுகளுக்கு மேல் தற்போதைய பணியையே தொடர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர் என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

கீழ் மட்ட பணியாளர்களுக்கு பெரும் பிரச்சனை

கீழ் மட்ட பணியாளர்களுக்கு பெரும் பிரச்சனை

இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் பலரும் தங்கள் பணியில் இல்லாத பிற பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். இவற்றில் பலவும் நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பல நாடுகளில் உள்ள பெண்களும் சிறு அளவிலான பதவிகளில் உள்ள கீழ்மட்ட பணியாளர்கள் இத்தகைய பிரச்சனைகளை அனுபவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஹைபிரிட் மாடல் பணியில் என்ன பிரச்சனை

ஹைபிரிட் மாடல் பணியில் என்ன பிரச்சனை

இன்று ஐடி துறையில் மிகுந்த வரவேற்கதக்க விஷயமாக பார்க்கப்படும் ஹைபிரிட் மாடல் பணியில் உள்ள 60% பெண்கள், முக்கியமான கூட்டங்களில் இருந்து ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் ஆண்கள் முக்கிய பங்கு வகிக்கும் கூட்டங்களுக்கு அழைக்கபடாதது, பேச்சுகளில் இருந்து விலக்கபடுவது என பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனினும் இந்த ஆய்வில் பங்களித்தவர்களில் 5% பேர் தங்களது அலுவலகங்களில் இருந்து மன நல உதவிகளை பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

என்ன தான் வழி

என்ன தான் வழி

இதற்கு சரியான வழி தான் என்ன? என்ற நிலையில் ஆய்வாளர்கள் ஊழியர்களை நிறுவனங்கள் அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். குறிப்பாக பெண் ஊழியர்களிடம் பேச வேண்டும். இது ஊழியர்கள் அதிகளவில் வெளியேறுவதை தடுக்க உதவிகரமாக இருக்கலாம் என கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The great resignation continues, as 40 percent of women workers look for a new job: says deloitte report

The great resignation continues, as 40 percent of women workers look for a new job: says deloitte report/தொடரும் தி கிரேட் ரெசிக்னேஷன் காலம்.. பெண் பணியாளர்களின் அதிரடி முடிவுகள்.. இனி என்னவாகும்?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X