அமெரிக்க நிறுவனங்கள் ஐடி உள்ளிட்ட சேவைகளை வெளிநாட்டு நிறுவனங்கள், நபர்களிடம் இருந்து பெறுவதற்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையிலான HIRE சட்டத்தை செனட் சபையில் கொண்டு வந்துள்ளது. இது செனட் மற்றும், பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டால் பின்னர் டிரம்ப் கையெழுத்திட்டு சட்டமாக மாற்றப்படும்.
ஒரு வேளை இது சட்டமானால் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் அல்லது நபரிடமிருந்து ஒரு சேவையைப் பெற்று அதற்கான கட்டணத்தை செலுத்தும் போது அந்த கட்டணத்தில் 25 சதவீதம் தொகையை வரியாக அமெரிக்க அரசுக்கு வழங்க வேண்டும். இது அமெரிக்க நிறுவனங்கள் ஐடி சேவைகளை பெறுவதற்காக இது நாள் வரை செய்த செலவை அதிகரிக்க செய்கிறது .

இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கும் குடியரசு கட்சியினர் இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் அமெரிக்க நிறுவனங்களிடம் வேலையை வழங்குவதிலும் முன்னுரிமை தரும் என கூறுகின்றனர் . ஆனால் உண்மையில் இது அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்களுக்கு தான் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் அமெரிக்க நிறுவனங்களிடம் இது போன்ற ஐடி சேவைகளை பெறுவதற்கான திறன்மிகு ஊழியர்கள் அமெரிக்க மண்ணிலேயே கிடைப்பது கடினம் அல்லது ஒரு குறுகிய காலத்திலேயே அத்தகைய நபர்களை அவர்கள் பெற்று அவர்களுக்கான சேவைகளை பெறுவது கடினமானதாக இருக்கும் . இந்த சூழலில் அமெரிக்க நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களிடம் அதிக கட்டணத்திற்கு தான் ஐடி சேவைகளை பெற வேண்டியது இருக்கும் இது அமெரிக்க நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தும் என எச்டிஎப்சி செக்யூரிட்டி நிறுவனத்தின் துணைத் தலைவர் அமித் சந்திரா தெரிவிக்கிறார்.
இந்த 25 சதவீத வரியை அமெரிக்க நிறுவனங்கள் இந்திய ஐடி நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு முன் வர வாய்ப்பு இருக்கிறது, வருவாயை இழந்து விடக்கூடாது கிளைண்டினை இழந்து விடக்கூடாது என்பதற்காக சில இந்திய நிறுவனங்கள் இந்த வரிச் சுமையை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறார் இந்த விஷயத்தில், ஒரு சேவைக்காக 100 டாலரை பெற்ற இந்திய நிறுவனங்கள் இனி 80 டாலர் வரை பெற வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமெரிக்க நிறுவனங்கள் திறன் மிகு வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவிற்கு ஹெச்1பி விசா உ:ள்ளிட்டவற்றின் மூலம் அழைத்து வந்து வேலை வாங்குவதிலும், இந்திய நிறுவனங்கள் ஹெச்1பி விசா மூலம் ஊழியர்களை அமெரிக்க மண்ணிற்கு அனுப்புவதிலும் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. இது தவிர அமெரிக்க பொருளாதாரமும் மந்தமாக இருக்கிறது. இந்த சிக்கல்களுக்கு மத்தியில் HIRE சட்டம் அமெரிக்க நிறுவனங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு குறுகிய காலத்தில் வருவாய் தாக்கம் இருந்தாலும் நீண்ட கால நோக்கில் அது மறைந்துவிடும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?



Click it and Unblock the Notifications