எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விமான விபத்து, ஒரு தாய் தன் மகன் மீது வைத்திருந்த அன்பின் வெளிப்பாடு, கார் வணிகத்தைப் பற்றி எதுவுமே தெரியாத குழு என பல்வேறு திருப்பங்களுடன் உருவானது தான் மாருதி. கேட்பதற்கு என்னவோ ஹாலிவுட் ஸ்கிரிப்ட் போல தோன்றுகிறது அல்லவா.. இதுதான் மாருதி உருவானதன் உண்மைச் சம்பவம். 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்காவில் ஃபோர்ட் மாடல் டி பிரபலமடைந்து வந்தது. அதேபோல யூரோபில் ஃபோக்ஸ்வேகன் பிரபலமானது.
அந்த சமயத்தில் தான் மாருதி 800 இந்தியாவில் உற்பத்தியானது. மறைந்த இந்திரா காந்தியின் மகனான சஞ்சய் காந்தியின் நினைவாக தான் மாருதி கொண்டுவரப்பட்டது. 1980-ஆம் ஆண்டு விமான விபத்தில் சஞ்சய் காந்தி இறப்பதற்கு முன்பு கார் வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்று எண்ணினார். இவருடைய மரணம் இந்திரா காந்தியை அவருடைய கனவை நிறைவேற்ற தூண்டியது. அந்த நேரத்தில் இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தார்.

அந்த சமயம் பொருளாதார நெருக்கடி இருந்தது. இதுபோன்ற சூழலில் இந்திய அரசு கார் தயாரிப்பில் ஈடுபடும் என்று யாரும் நினைக்கவில்லை. அப்படித்தான் மாருதி உருவானது. 1981-ஆம் ஆண்டில் மாருதி உத்யோக் லிமிடெட் உருவாக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஒரு கார் நிறுவனத்தை எப்படி உருவாக்க வேண்டும். எப்படி வழி நடத்த வேண்டும் என்ற யோசனை யாருக்கும் இல்லை.
"வேர்ல்ட் கார்ஸ்" என்ற புத்தகத்தை படித்து சேர்மேன் வி.கிருஷ்ணமூர்த்தி, சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் டைரக்டரான ஆர்.சி. பார்கவா ஆகியோர் இணைந்து நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு 12 ஆண்டுகள் எம்டியாக பணியாற்றினர். இருவரும் சேர்ந்து கூட்டணி அமைக்க நிறுவனத்தை தேட ஆரம்பித்தனர். பல கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. Fiat, Peugeot, Volkswagen, Renault மற்றும் Nissan போன்ற உலகளாவிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் வாகனத் துறைக்கு எதிர்காலம் இல்லை என்று பின்வாங்கியது.
கூட்டணி அமைக்க மாருதி நிறுவனம் தயாராக உள்ளது என்ற செய்தி கிடைத்தவுடன், சுஸூகி உடனடியாக ஒப்பந்தத்தை முடிக்க பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை இந்தியாவிற்கு அனுப்பியது. அதன் பிறகு அக்டோபர் 2, 1982-ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தில் சுஸூகி மற்றும் மாருதி நிறுவனம் கையெழுத்திட்டது.
அதிலிருந்து வெறும் 14 மாதங்களில் புதிய தொழிற்சாலை, சப்ளையர் பேஸ், டீலர், டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க் ஆகியவை அமைக்கப்பட்டது. இந்திரா காந்தியின் விருப்பத் திட்டத்திற்கு உடனடியாக அனுமதியும் வழங்கப்பட்டன. அதன் பிறகு டிசம்பர் 14, 1983 அன்று இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியரான ஹர்பல் சிங் முதல் மாருதி 800-இன் சாவியைப் பெற்றுக் கொண்டார். மாருதி 800 படிப்படியாக வாகன ஓட்டிகளின் ஈர்ப்பை பெற்றது. முதன்முறையாக கார்கள் ஆடம்பரமான பொருளாக கருதப்படாமல், தனிப்பட்ட பயன்பாட்டிற்கான ஒன்றாக மாறியது.
30 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட பத்மினி மற்றும் அம்பாசிடர் கார்களுக்கு பிறகு கார் உரிமையாளர்கள் மாருதி 800 காரை பயன்படுத்த தொடங்கினர். அப்போது இருந்த கார்களை விட இரண்டு மடங்கு விலை அதிகம் என்றாலும் அதை கொடுத்து மாருதி 800 காரை வாங்க மக்கள் தயாராகத் தொடங்கினர்.


Click it and Unblock the Notifications