12 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் இருந்தாலும் வரி கட்ட தேவையில்லை என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வருமான வரி சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பழைய வருமான வரி சட்டம் கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த சூழலில் பழைய சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமான வரி சட்ட மசோதா நடப்பு கூட்டத் தொடரில் அறிமுகமாக இருக்கிறது.
புதிதாக அறிமுகமாக இருக்கும் சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 7ம் தேதி ஒப்புதல் அளித்தது. புதிய வருமான வரி சட்டப்படி மாதம் 1 லட்சம் வருமானம் என ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி கிடையாது.

புதிய வருமான வரி மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மசோதா நிலைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்படும். அந்தக் குழு மசோதா குறித்து ஆலோசனைகளை நடத்தும், மேலும் அதில் மாற்றங்களையும் பரிந்துரைக்கலாம். இந்தநிலையில், 'வருமான வரி மசோதா 2025' என அழைக்கப்படும் புதிய வருமான வரி மசோதா, ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை கொண்டுவரப்பட்ட ஆறாவது வருமான வரி மசோதா ஆகும். புதிய மசோதா தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961-ஐ மாற்றும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, அது 'வருமான வரிச் சட்டம், 2025' என்று அழைக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மசோதா 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகளை (மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு பிரிவுகளாக மாறும்) கொண்டுள்ளன. 'மதிப்பீட்டு ஆண்டு', 'நிதி ஆண்டு' மற்றும் 'முந்தைய ஆண்டு' ஆகிய வார்த்தைகளை 'வரி ஆண்டு' என்ற ஒரே ஒரு வார்த்தையால் மாற்ற முன்மொழியப்படவுள்ளது. வரி ஆண்டு என்பது ஏப்ரல் 1, 2026 முதல் 12 மாத நிதிக் காலத்தை கொண்டது ஆகும்.
முக்கியமாக, குறுகிய கால மூலதன ஆதாயங்கள் (STCG) வரி காலம் மற்றும் விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனடிப்படையில் STCG காலம் 12 மாதங்களாகவும், விகிதம் 20 சதவீதமாகவும் உள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961, மொத்தம் 298 பிரிவுகளைக் கொண்டுள்ளது. வருமான வரி மசோதாவில் இது 536 உட்பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961க்குப் பதிலாக கொண்டுவரப்படுகிறது. மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, இது 'வருமான வரிச் சட்டம், 2025' என்று அழைக்கப்படும்.
புதிய வருமான வரி மசோதா பின்வருவனவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது, வருமான வரி சட்டம் மிக எளிமையாகவும் எல்லோரும் புரிந்துகொள்ளும்படி மாற்றப்படும். புதிய தளம், செயலி உருவாக்கப்படும். தனி நபர் வருமான வரி மேலும் எளிமையாக்கப்படும். பிஸ்னஸ் வருமான வரி இப்போது சிக்கலாக உள்ளது. இதை மிக எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளும்படி மாற்றப்படவுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications