இந்தியாவில் இல்லுமினாட்டி.. உருவாக்கியது யார் தெரியுமா..?!

உலகில் பல பழமையான ரகசியங்கள், விடை காண முடியாத விடுகதைகள், மர்மமான நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில் காலம் காலமாக கூறப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்று இல்லுமினாட்டிகள். இல்லுமினாட்டிகள் 2000 ஆண்டுகளை கடந்து இன்றும் ரகசியமாக வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் தான் இந்த உலகில் உள்ள அனைத்து துறைகளையும் இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பேரரசர் அசோகர் காலத்திலேயே ஒன்பது ரகசிய மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் கிட்டதட்ட இன்றைய இல்லுமினாட்டிகள் போன்றே செயல்பட்டதாகவும் கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இல்லுமினாட்டிகள்

இல்லுமினாட்டிகள்

இல்லுமினாட்டி உள்பட ஒருசில இரகசிய அமைப்புகள் பல ஆண்டுகளான உள்ளன என்றும், அவை எப்போதும் மேம்பட்ட நாகரிகங்களின் அம்சமாக இருக்கின்றன என்றும், அவை திரைக்குப் பின்னால் உலகை ஆளும் ஒரு அமைப்பு என்றும் கூறப்பட்டு வருகிறது.

பேரரசர் அசோகர்

பேரரசர் அசோகர்

கிமு 270 இல் மௌரியப் பேரரசர் அசோகரால் நிறுவப்பட்ட "ஒன்பது ரகசிய மனிதர்கள்" என்ற இந்தியாவில் உள்ள பழமையான இரகசிய அமைப்பும் இல்லுமினாட்டிகளில் ஒன்று என கூறப்படுகிறது. இவர்கள் சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் அறிவியல் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தும் ஒரு இரகசிய அமைப்பாகும்.

ஒன்பது அறியப்படாத வீரர்கள்

ஒன்பது அறியப்படாத வீரர்கள்

அசோகர் தனது ஒன்பது அறியப்படாத வீரர்களை எப்போதும் ரகசியமாக இருக்குமாறு கட்டளையிட்டு இருந்தார் என்றும், அவர்களது வாரிசுகள் இன்னும் ரகசியமாக இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களுடைய ரகசியங்கள் தலைமுறை தலைமுறையாக கடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 கலிங்க போர்

கலிங்க போர்

கலிங்கப் போருக்குப் பிறகு, அசோகர் மிகவும் அதிர்ச்சியடைந்தார், மேலும் புத்த மதத்தைப் பின்பற்ற முடிவு செய்தார், மேலும் அதை நடைமுறையில் உலகின் பிற பகுதிகளுக்கும் பரப்பினார். அறிவே சக்தி என்று அசோகர் நம்பினார். மேலும் மக்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை தீமை மற்றும் போரில் ஈடுபடுத்துவதைத் தடுத்தார். அந்த நேரத்தில் தான் இந்தியாவில் அறியப்படாத ஒன்பது மனிதர்கள் என்ற ஒரு அமைப்பை அசோகர் ஏற்படுத்தினார் என்று கூறப்படுகிறது.

ரகசியம்

ரகசியம்

இந்த 9 பேரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டதாகவும், அதனால் அவர்கள் மட்டுமே அறிவியல் கோட்பாடுகள் மற்றும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து உருவாக்க முடியும் என்றும், சாமானியர்களுக்கு இந்த அறிவு கிடைத்தால் பேரிடர் என்றும் அஞ்சப்பட்டது. எனவே இயற்கை அறிவியல், உளவியல், இயற்பியல், வேதியியல், ஜோதிடம், வானியல், பிரச்சாரம், நுண்ணுயிரியல், போன்ற அனைத்துக் களங்களிலும் இந்த இரகசிய சமூகம் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

வேலை

வேலை

இந்த ஒன்பது ஆண்களுக்கும் இலக்குகளை நிறைவேற்றுதல், புத்தகத்தை எழுதுதல், புதுப்பித்தல் மற்றும் திருத்தும் பணி வழங்கப்பட்டது. ஒன்பது பேரில் யாரேனும் ஒருவர் மரணம், உடல்நலம் மங்குதல், அல்லது ஓய்வு பெற விரும்பினால் ​​மிகவும் கவனமாக புதியவர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். இந்த ஒன்பது பேர்களின் வாரிசுகள் தான் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

புத்தகம்

புத்தகம்

ஆல்பட் முண்டி என்ற ஆங்கில எழுத்தாளர், இந்தக் கதையால் பாதிக்கப்பட்டு, 1923ஆம் ஆண்டு 'ஒன்பது தெரியாத மனிதர்கள்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அவர் பேரரசர் அசோகர் உள்பட பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அசோகரால் நியமிக்கப்பட்டஒன்பது மனிதர்களால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் ஒன்பது புத்தகங்களின் பட்டியலை அவர் பட்டியலிட்டார். இந்த பட்டியல் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த புத்தகத்தில் உடலியல், தகவல் தொடர்பு முறைகள், புவியீர்ப்பு, நுண்ணுயிரியல், உளவியல் போர் உத்திகள், அண்டவியல், உலோக மாற்றம், சமூகவியல் ஆகிய பல விஷயங்களை அலசியது.

 வேற்றுகிரக தகவல் தொடர்பு

வேற்றுகிரக தகவல் தொடர்பு

மேலும் இந்த புத்தகத்தில் மற்ற கிரகங்களின் தகவல்தொடர்பு அதன் மேம்பட்ட வடிவமைப்பு, வெளிநாட்டவர்களுடனான தொடர்பு, வேற்று கிரக தகவல் தொடர்பு மற்றும் லகிமாவின் உடலியல் நிகழ்வுகளைப் பயன்படுத்தி புவியீர்ப்பு விசையை மீறுவதற்கான நுட்பங்கள் ஆகியவற்றையும் கையாண்டதாக கூறப்படுகிறது.

ஹிட்லரின் ஆர்வம்

ஹிட்லரின் ஆர்வம்

ஹிட்லரின் ஆர்வத்தைத் தூண்டிய உளவியல் போரைப் பற்றியும் இந்த புத்தகம் பேசுகிறது. மேலும் இந்த புத்தகத்தின் ஆசிரியர் தகவல்களைச் சேகரிக்க திபெத் மற்றும் இந்தியாவிற்கு பல பயணங்களை செய்ததாகவும், நாஜிக்கள் ஜெர்மனியர்களைக் கையாள இரகசிய தகவல்களைப் பெற்றதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

இல்லுமினாட்டிகள் யார் யார்?

இல்லுமினாட்டிகள் யார் யார்?

ஐசக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோர் அசோகரின் ஒன்பது அறியப்படாத மனிதர்களில் வாரிசுகளாக இருந்தனர் என்றும் கூறப்படுகிறது. ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக இரகசியமாக வாழ்ந்து வருகின்றனர் என்று நம்புவது எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், அவர்கள் மனிதனுக்கு சில நன்மைகளையும் பாதுகாப்பையும் வழங்கியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

 முழுக்க முழுக்க வதந்தியா?

முழுக்க முழுக்க வதந்தியா?

ஆனால் அதே நேரத்தில் இல்லுமினாட்டிகள் வாழ்ந்ததாகவும், தற்போது வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுவதற்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லை என்றும் இது முழுக்க முழுக்க காலங்காலமாக பரப்பப்படும் வதந்தி என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

இந்த வதந்தியை வெறும் வதந்தியாக ஒதுக்க முடியாது என்றும் இது உண்மையாகவும் இருக்கலாம் என்றும் பல அறிஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ இருந்தாலும் இல்லுமினாட்டி குறித்த தகவல்கள் நம்புவதற்கான அடிப்படை ஆதாரம் இன்று வரையில் கிடைக்க வில்லை என்பது தான் உண்மை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+