ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு உலகில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. எனவே தான் ஐபோன் அறிமுக நிகழ்ச்சிகள் மிகபெரிய கவனம் பெறுகின்றன. அந்த வகையில் அண்மையில் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த நிகழ்ச்சியில் ஐபோன் 16 சீரிஸ்ல் இருக்கும் கேமராவின் சிறப்பம்சம் குறித்து விளக்கிய இந்தியர் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி இருக்கிறார்.
கடந்த 9ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த அறிமுக நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் ப்ராடக்ட் மேனேஜராக பணிபுரியும் பியூஷ் பிரதிக் ஐபோன் 16 சீரிஸ் போன்களில் இருக்கும் கேமராக்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கினார்.

ஐபோன் 16 மாடலில் பல்வேறு கேமரா கண்ட்ரோல் அம்சங்கள் பயனாளர்கள் எளிதில் மேற்கொள்ளும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் பின்னணில் இருப்பவர் பியூஷ் பிரதிக் தான். எனவே தான் அவரே இவற்றை அறிமுக நிகழ்ச்சியின் போது மேடையில் தோன்றி விளக்கினார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இவரைப் பற்றி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இவர் ஐஐடி டெல்லியில் கல்வி பயின்றவர் என்பது தெரியவந்துள்ளது. டெல்லி ஐஐடியில் கோல்ட் மெடல் வாங்கியவர் தான். இவர் ஐஐடி டெல்லியில் பிடெக் மற்றும் எம் டெக் என இரண்டு பட்டப்படிப்புகளை முடித்தவர்.
பின்னர் எம்பிஏ பயின்ற அவர், 2019 ஆம் ஆண்டு தன்னுடைய படிப்புகளை முடித்து பயோகான் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் வேலை செய்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவர் ஆப்பிள் நிறுவனத்தின் ப்ராடக்ட் மேனேஜராக வேலையில் சேர்ந்துள்ளார்.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக இவர் ஆப்பிள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் திருபாய் ஸ்காலர்ஷிப்பில் தான் ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பை முடித்திருக்கிறார்.
இந்திய மாணவர்களில் குறிப்பிடத்தக்க மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. இங்கேதான் அவர் பல்வேறு தொழில் நுணுக்கங்களை அறிந்து கொண்டார்.
இதனை அடுத்து தான் இவருக்கு ஆப்பிள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைத்தது.
இவர் இதற்கு முன்பு பல்வேறு ஐபோன் அறிமுக நிகழ்ச்சிகளிலும் முக்கிய பங்கு வகித்தவராக இருக்கிறார். ஐபோன் 13 சீரிஸில் தொடங்கி அடுத்தடுத்து வெளியான ஐபோன் மாடல்களுக்கெல்லாம் பின்னணியில் இருப்பவர்களுள் இவரும் முக்கியமானவர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications