சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டின் பணவீக்கம் மாறியுள்ளதா?
இந்திய மக்கள் அனைவரும் இன்னும் ஒரு வாரத்தில் நாம் சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் தான் இருந்தது. பிரிந்திருந்த பகுதிகளை இணைத்தது, நாட்டிற்கென அரசியலமைப்பை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது என பல்வேறு சவால்களை கடந்து தான் இந்தியா எனும் ஜனநாயக நாடு உருவானது. சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது வரை இந்தியாவில் பணவீக்க விகிதம் எப்படி மாறி இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் பணவீக்கம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்வது அவசியம். பணவீக்கம் என்ற சொல்லிலேயே இதற்கான அர்த்தம் ஒளிந்து இருக்கிறது. அதாவது பொருட்களை வாங்க தேவையான பணத்தின் சக்தி குறைவதையே பணவீக்கம் என அழைக்கிறோம்.

சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டின் பணவீக்கம் மாறியுள்ளதா?

இரண்டு சந்தர்ப்பங்களில் பணவீக்கம் என்பது ஏற்படுகிறது. தேவைக்கு குறைவான அளவில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டு விட்டால் அந்த பொருளின் மதிப்பு அதிகமாகிவிடும் அதற்காக நாம் கூடுதல் பணத்தை செலவிட வேண்டும். உதாரணமாக இதற்கு முன்பு 10 ரூபாய்க்கு வாங்கிய பொருளை 20 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். இங்கே பொருளின் மதிப்பு அதிகமாகி இருக்கிறது அதை வாங்கக் கூடிய பணத்தின் திறன் குறைந்திருக்கிறது.

இரண்டாவது ஒரு நாட்டில் அதிக அளவில் பணத்தை அச்சிட்டு வெளியிடப்பட்டிருந்தால் பணவீக்கம் ஏற்படுகிறது. பணப்புழக்கம் அதிகமாக இருக்கிறது ஆனால் தேவைக்கும் குறைவான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்ற சூழலில் பணவீக்கம் ஏற்படுகிறது.

தேவையும் உற்பத்தியும் சமமாக இல்லாமல் இருப்பது, அரசின் நிதி பற்றாக்குறை ,பண பட்டுவாடா அதிகரிப்பது ஆகியவற்றின் விளைவாக பணவீக்கம் ஏற்படுகிறது. பணவீக்கம் என்பது சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கிறது. பணவீக்கம் அதிகமாக இருக்கும் போது அத்தியாவசிய பொருட்களின் விலை கூடி இருக்கும். பணவீக்கம் என்பது காலப்போக்கில் தனி நபர்களின் பொருட்கள் வாங்கும் திறனை குறைக்கிறது, இது பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மத்திய ரிசர்வ் வங்கி விதிகளின்படி இந்தியாவில் பணவீக்க விகிதத்தை அரசுதான் நிர்ணயம் செய்கிறது. பணவீக்க விகிதத்தை நிதிக் கொள்கைகள் மூலம் கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருக்கிறது. மொத்த விலை விற்பனை குறியீடு மற்றும் நுகர்வோர் விலை குறியீடு ஆகிய இரண்டின் அடிப்படையில் தான் அரசு பணவீக்கத்தை கணக்கிடுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை பணவீக்க விகிதம் தொடர்பான நம்பத்தகுந்த தகவல்கள் 1960ஆம் ஆண்டு முதல் தான் கிடைக்கின்றன. மேக்ரோ ட்ரெண்ட்ஸ் (macrotrends) என்ற தளம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் பணவீக்க விகிதம் 1960 ஆம் ஆண்டில் 1.78 % என இருந்துள்ளது. இதுவே ஐந்தாண்டுகள் இடைவெளி என பார்க்கும் போது 1965இல் இது 9.47% என மாறியது. 1970 ஆம் ஆண்டில் 5.09 % என குறைந்தது. 1974 ஆம் ஆண்டின் போது இந்தியாவின் பணவீக்க விகிதம் 28.60% என்ற உச்சத்தை எட்டியது. அதாவது பணவீக்க விகிதம் அதிகமாக இருந்த இந்த காலத்தில் விலைவாசி உயர்வு அதிகமாக இருந்தது என அர்த்தம்.

ஆனால் இரண்டு ஆண்டு காலத்திலேயே அதாவது 1976 இல் பணவீக்க விகிதம் -7.63 % என்ற நிலைக்கு சரிந்தது. அதாவது இந்த ஆண்டில் பொருட்களின் விலை சரிவை கண்டு பணத்தின் மதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அடுத்த ஆண்டிலேயே 8 .31% என உயர்ந்த பணவீக்க விகிதம் 1980 ஆம் ஆண்டில் 11.35% என்ற அளவை எட்டியது.

1985இல் இது 5.56 % என குறைந்தது,1990 ஆம் ஆண்டில் 8.97% என உயர்ந்தது. 1991இல் எதிர்பாராத வகையில் 13.87% என உச்சம் தொட்டது. பின்னர் படிப்படியாக குறைந்த நாட்டின் பணவீக்க விகிதம் 1995ஆம் ஆண்டில் 10.2% சதவீதம் என ஆனது. 2000 ஆம் ஆண்டில் 4.01% என்ற நிலையை எட்டியது. அப்போது முதலே பணவீக்க விகிதம் ஓரளவு கட்டுக்குள் இருக்கிறது.

2010 ஆம் ஆண்டில் மீண்டும் 11.99% என உயர்ந்தது. 2015இல் 4.91% என குறைந்தது. 2020 ஆம் ஆண்டில் 6.62 % என மாறியது. கடந்த ஏப்ரலில் அரசு வெளியிட்ட தகவலின் படி பணவீக்க விகிதம் 4.83% என்ற அளவில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பணவீக்க விகிதம் 1974 ஆம் ஆண்டில் தான் 28.60% என்ற அதிகபட்ச அளவை எட்டியது. பின்னர் பலமுறை 10 %க்கும் மேல் சென்றிருந்தாலும் ஓரளவு அடுத்தடுத்த ஆண்டுகளிலேயே அவை கட்டுப்படுத்தப்பட்டன. அதே போல 1969லஇல் - 0.58% மற்றும் 1976இல் -7.63 % என இரண்டு முறை நாட்டின் பணவீக்கம் மைனஸிலும் சென்றிருக்கிறது.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+