நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவும் நோக்கில் 700 கோடி டாலர் கடன் வழங்க கடந்த ஆண்டு பன்னாட்டு நிதியத்துக்கும், அந்நாட்டுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தானுக்கு ஏற்கனவே முதல் தவணையாக 110 கோடி டாலரை பன்னாட்டு நிதியம் விடுவித்து விட்டது. இந்நிலையில் கடந்த வாரம் இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய பிறகும், பன்னாட்டு நிதியம் பாகிஸ்தானுக்கு 100 கோடி டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்தது.
தீவிரவாதம்
பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான நிதியுதவி ராணுவ நோக்கங்களுக்காகவோ அல்லது அரச ஆதரவு பெற்ற தீவிரவாதத்திற்காகவோ பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக பன்னாட்டு நிதியத்தை இந்தியா எச்சரித்தது. ஆனாலும், பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க பன்னாட்டு நிதியம் ஒப்புதல் அளித்தது. அதேசமயம், இரண்டாவது கட்ட நிதியை விடுவிப்பதற்காக பாகிஸ்தானுக்கு புதிதாக 11 நிபந்தனைகளை பன்னாட்டு நிதியம் விதித்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு பன்னாட்டு நிதியம் விதித்துள்ள மொத்த நிபந்தனைகளின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது.

பன்னாட்டு நிதியத்தின் புதிய நிபந்தனைகளில், ரூ.17.6 லட்சம் கோடி பட்ஜெட்டுக்கு நாடாளுமன்ற ஒப்புதல், மின்சார கட்டணங்களுக்கான கடன் சேவை கூடுதல் வரி அதிகரிப்பு மற்றும் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்ட கார்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குதலும் அடங்கும். அடுத்த நிதியாண்டுக்கான பாகிஸ்தானின் பாதுகாப்பு பட்ஜெட் ரூ.2.14 லட்சம் கோடி என்ற அளவில்தான் இருக்க வேண்டும் என்று பன்னாட்டு நிதியம் குறிப்பிட்டுள்ளது.
பட்ஜெட்
ஆனால், இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவுடனான மோதலுக்கு பிறகு, பாகிஸ்தான் அரசாங்கம் ரூ.2.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக அல்லது பட்ஜெட்டில் 18 சதவீதம் அதிகரிப்பை ஒதுக்குவதாக அறிவித்தது. பன்னாட்டு நிதியத்தின் அறிக்கையின்படி, பாகிஸ்தானின் மத்திய பட்ஜெட்டின் மொத்த அளவு ரூ.17.6 லட்சம் கோடி. இதில் வளர்ச்சி செலவினங்களுக்கான ரூ.1.07 லட்சம் கோடியும் அடங்கும்.
2025 ஜூன் இறுதிக்குள் திட்ட இலக்குகளை அடைவதற்கான பன்னாட்டு நிதிய ஊழியர் ஒப்பந்தத்திற்கு இணங்க, நிதியாண்டு 2026 பட்ஜெட்டுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறுவதற்கான புதிய நிபந்தனையை அது விதித்துள்ளது. மின் கட்டணங்களை செலவு மீட்பு மட்டங்களில் பராமரிக்க வேண்டும் என்று அந்நாட்டை பன்னாட்டு நிதியம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் 2025 ஜூலை 1ம் தேதிக்குள் பாகிஸ்தான் அரசாங்கம் வருடாந்திர மின்சார கட்டண மறுஅடிப்படை அறிவிப்புகள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்க்குலர் கடன்
அரசாங்கத்தின் மோசமான நிர்வாகத்திற்கு மேலதிகமாக, தவறான எரிசக்தி கொள்கைகள், சர்க்குலர் கடன் அதிகரிப்புக்கு காரணமாகின்றன என்று பாகிஸ்தானிடம் பன்னாட்டு நிதியமும், உலக வங்கியும் தெரிவித்தன. மேலும், இந்தியாவுடான பதட்டங்கள் திட்டத்தின் நிதி, வெளி மற்றும் சீர்திருத்த இலக்குகளுக்கு ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என்று பாகிஸ்தானை பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை செய்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications