அடுத்தடுத்து அநியாயம்..!! இந்திய கிரிக்கெட் ஜெர்சி Sponsor-ன் சாபம்.. என்ன நடக்குது..?

இந்திய கிரிக்கெட் அணிக்கு நிதியுதவி செய்வது என்பது உலக அளவில் மிகவும் மதிப்புமிக்க ஒரு விளம்பர வாய்ப்பாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தியத் தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவின் சமீபத்திய கருத்து, இந்த ஸ்பான்சர்ஷிப்பில் மறைந்திருக்கும் அபாயங்களை நகைச்சுவையாக வெளிப்படுத்தியுள்ளது. உங்கள் பிராண்டின் உயிர்வாழும் திறன்களை சோதிக்க விரும்புகிறீர்களா? பங்குச் சந்தையை மறந்துவிடுங்கள். இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை ஸ்பான்சர் செய்ய முயற்சிக்கவும்! என்று கோயங்கா தனது X பக்கத்தில் பதிவிட்டார். இந்த ஒரு வரிப் பதிவு, கிரிக்கெட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படும் 'ஜெர்சி ஜின்க்ஸ்' அல்லது 'ஜெர்சி துரதிர்ஷ்டம்' என்ற கருத்தை மீண்டும் ஒருமுறை உயிர்ப்பித்துள்ளது. ஆனால் ஹர்ஷ் கோயங்கா அவர் செய்த டிவீட்டை டெலிட் செய்துவிட்டார்.

கோயங்காவின் இந்தக் கருத்து, மிகவும் சரியான நேரத்தில் வந்துள்ளது. பாராளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025-க்குப் பிறகு, ஃபேண்டஸி விளையாட்டு நிறுவனமான ட்ரீம்11, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (BCCI) செய்து கொண்ட தனது ரூ.358 கோடி மதிப்பிலான ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. புதிய சட்டம், பணம் சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கான விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப்களுக்கு தடை விதித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம்.

அடுத்தடுத்து அநியாயம்..!! இந்திய கிரிக்கெட் ஜெர்சி Sponsor-ன் சாபம்.. என்ன நடக்குது..?
Photo Credit:

ட்ரீம்11 நிறுவனத்தின் இந்த முடிவு, பிசிசிஐ-க்கு ஒரு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி ஆசிய கோப்பை போட்டிகள் தொடங்கவிருப்பதால், மாற்று ஸ்பான்சரைத் தேடுவதற்கு வாரியத்திற்கு மிகக் குறைந்த நேரமே உள்ளது. இருப்பினும், இந்த 'ஜெர்சி துரதிர்ஷ்டம்' பற்றிய பேச்சுக்கள் இருந்தாலும், இந்திய கிரிக்கெட் ஜெர்சியின் முன்பக்க இடம் இன்றும் மிகவும் விரும்பப்படும் விளம்பர இடமாகவே நீடிக்கிறது என்று உள்விவர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டைட்டில் ஸ்பான்சர் ஒரு சாபமா..?
Sahara Group: சஹாரா குழுமத்தின் விளம்பரச் சின்னம், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக (2001-2013) இந்திய கிரிக்கெட் ஜெர்சியில் நீடித்தது. 2003 உலகக் கோப்பையில் தோல்வி முதல் 2011 உலகக் கோப்பையில் இந்தியாவின் மகத்தான வெற்றி வரை, சஹாரா அணிக்குத் துணை நின்றது. ஆனால், பின்னர், நிறுவனம் நிதி மற்றும் சட்ட சிக்கல்களை எதிர்கொண்டது. சுமார் 30 மில்லியன் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.24,000 கோடி திரட்டிய பிறகு, செபி நடவடிக்கைகளை எதிர்கொண்டது. நிறுவனத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் 2014-இல் கைது செய்யப்பட்டார். இன்றும், முதலீட்டாளர்களின் பணத்தை மீட்கும் முயற்சிகள் தொடர்கின்றன.

Star India: சஹாராவிற்குப் பிறகு, டிஸ்னிக்குச் சொந்தமான ஸ்டார் இந்தியா நிறுவனம் ஜெர்சி ஸ்பான்சராக வந்தது. ஆனால், பின்னர் அந்த நிறுவனம் சந்தையில் தனது ஆதிக்கத்தை தவறாகப் பயன்படுத்தியதாக போட்டி ஆணையத்தால் விசாரிக்கப்பட்டது. மேலும், அதன் ஹாட்ஸ்டார் தளத்தின் இழப்புகள் காரணமாக ஜியோவுடன் இணைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

Micromax: அடுத்ததாக, உள்நாட்டு பியூச்சர் போன் மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை வென்றது. ஆனால் மிகவும் குறைந்த காலம் மட்டுமே இந்த ஒப்பந்தத்தை தக்க வைத்தது. இதற்கு முக்கிய காரணம் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் கடுமையான போட்டியால் அதன் வணிகம் சரிந்தது.

PayTM: பின்னர், பேடிஎம் நிறுவனம் நீண்ட காலம் ஸ்பான்சராக இருந்தது. 2015-19 வரையிலான காலக்கட்டதில் பேடிஎம் இந்திய கிரிக்கெட் அணியில் டைட்டில் ஸ்பான்சராக இருந்தது. இக்காலக்கட்டத்தில் பேடிஎம்-ன் வர்த்தகம் அதிகரித்த நிலையில், தனது ஒப்பந்தத்தை நீட்டிக்க ரூ.326.80 கோடி வழங்கியது. ஆனால், பேடிஎம்-உம் அதன் சொந்த நிதிப் போராட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்களை எதிர்கொண்டது. இதனால் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வெளியேறியது.

Oppo: பேடிஎம் நிறுவனத்தை தொடர்ந்து இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை கைப்பற்ற வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் வந்த ஒப்போ, 1079 கோடி ரூபாய் என்ற பெரும் தொகைக்கு டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்த பெற்றது. ஆனால் இக்காலக்கட்டத்தில் ஒப்போ நிறுவனமும் மோசமான வருமானம், நோக்கியா - இண்டர்டிஜிட்டல் உடனான Patent பிரச்சனை காரணமாக பாதியிலேயே வெளியேறியது.

பைஜூஸ்: 2019-இல், EdTechநிறுவனமான பைஜூஸ் ஸ்பான்சராக வந்தது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளும், வர்த்தகத்தையும் மக்கள் முதலில் பாராட்டப்பட்டாலும், பின்னர் எதிர்பாராத வகையில் நிதி நெருக்கடியில் சிக்கியது. பிசிசிஐ நிறுவனம் ரூ.158 கோடி தொகையை திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக நீதிமன்றத்திற்குச் சென்றது. தற்போது பைஜூஸ் நிதி நெருக்கடி மட்டும் அல்லாமல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது. கடைசியாக தற்போது ட்ரீம்11.

ட்ரீம்11-ன் புதிய சவால்: இந்த வரிசையில் ட்ரீம்11 நிறுவனமும் இடம்பெற்றுள்ளது. ஆன்லைன் கேமிங் சட்டத்தின் புதிய தடை தவிர, இந்நிறுவனம் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் காலத்தில் ரூ.1,200 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, வரித்துறை ஆய்வுக்கும் உட்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் செய்வது என்பது பிராண்ட்களுக்கு நிகரற்ற விளம்பரத் தெரிவு நிலையை வழங்கினாலும், சட்டப் போராட்டங்கள், ஒழுங்குமுறை நெருக்கடி மற்றும் நிதி நெருக்கடி போன்ற அதிக ஆபத்துகளுடன் வருகிறது என்பதை வரலாறு காட்டுகிறது. ஹர்ஷ் கோயங்காவின் நகைச்சுவை, ஒரு அப்பட்டமான வணிகப் பாடமாக இப்போது மாறி நிற்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+