பாகிஸ்தானில் அந்நாட்டு பங்குச் சந்தையான கராச்சி பங்குச் சந்தை கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 22ம் தேதியன்று இந்தியாவில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 26 பேரை கொடூரமாக கொன்ற சம்பவம் கராச்சி பங்குச் சந்தை நிலைமை தலைக்கீழாக புரட்டி போட்டு விட்டது.
அச்சம்
தீவிரவாதிகளின் கொடூர செயலுக்கு பதிலடியாக பாகிஸ்தானை இந்தியாவை தாக்கும் என்ற அச்சம் பதற்றம் காரணமாக கராச்சி பங்குச் சந்தை சரிவை சந்தித்தது. இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் துல்லிய தாக்குதலை நடத்தியது. இதில், லஷ்கர்-இ-தொய்பா முகாம்கள் மற்றும் ஜெய்ஷ் இ முகமது தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் 100 தீவிரவாதிகள் பலியாகினர்.

கடந்த 8ம் தேதியன்று கராச்சி பங்குச் சந்தையின் குறியீட்டு எண் KSE 100 Index 7.6 சதவீதம் சரிவடைந்தது. பஹல்காம் தாக்குதல் மற்றும் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை காரணமாக கராச்சி பங்குச் சந்தை தொடர்ந்து படிப்படியாக சரிவு கண்டு வந்தது. கடந்த வாரம் கராச்சி பங்குச் சந்தையின் இன்டெக்ஸ் KSE 100 இன்டெக்ஸ் 6 சதவீதம் வரை சரிவு கண்டதாக தகவல்.
இந்திய ராணுவம்
இந்நிலையில், இந்திய ராணுவ தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் கடந்த சனிக்கிழமையன்று வெள்ளைக் கொடியை காட்டியது. போரை நிறுத்தும்படி இந்தியாவிடம் பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது. இதற்கு இந்தியாவும் ஒப்புக்கொண்டது. இதனால் ஆசிய பகுதியில் போர் பதற்றம் தணிந்தது. இதன் தாக்கம் திங்கட்கிழமையன்று இருநாடுகளின் பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
பன்னாட்டு நிதியம்
இதுதவிர பாகிஸ்தானுக்கு பன்னாட்டு நிதியம் 240 கோடி டாலர் நிதி உதவி அளிக்க ஒப்புதல் அளித்தது. இது பாகிஸ்தான் பங்குச் சந்தைக்கு சாதகான செய்தியாகும். போர் நிறுத்தம், பன்னாட்டு நிதியத்தின் நிதி உதவி போன்ற காரணங்களால் இன்று காலையில் கராச்சி பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. கராச்சி பங்குச் சந்தையின் குறியீட்டு எண் KSE 100 விறுவிறுவென 9 சதவீதம் உயர்ந்ததையடுத்து பங்குச் சந்தையில் 1 மணி நேரம் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. அப்போது KSE 100 இன்டெக்ஸ் 1,16,650 புள்ளிகளில் வர்த்தகமானது.


Click it and Unblock the Notifications