இந்தியாவில் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், வோட்கா, ஒயின் என பல ரகங்கள் உள்ளன. மெக்டாவல், ஷாவேலஸ், யூபி டிஸ்டிலரீஸ் போன்ற பல நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை விற்கின்றன். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து மதுபானங்களுக்கும் ராஜா என்றால் அது ஓல்டு மாங்க் ரம்தான். மோகன் மியாக்கின் டிஸ்டிலரீஸ் இந்த ரம்மைத் தயாரிக்கிறது.
அருந்துவதற்கு அவ்வளவு சுகமாக இருக்கும். மறுநாள் காலையில் வயிற்றுவலி, குமட்டல் போன்ற பிரச்னைகள் இருக்காது. காலைக்கடன்கள் ஸ்மூத்தாக முடியும். இதனால்தான் ஓல்டு மாங்க் ரம்முக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த ஓல்டு மாங்க்கைத் தயாரிக்கும் மோகன் மியாக்கின் டிஸ்டிலரீஸின் உரிமையாளரான கபில் மோகன் இதுவரை மது அருந்தியதே இல்லையாம். எப்பேர்ப்பட்ட மதுபானத்தைத் தயாரிப்பவருக்கு எப்பேர்ப்பட்ட குணம் இருக்கிறது!
ஓல்டு மாங்க் மட்டுமல்லாமல் சோலன் நம்பர் 1, கோல்டன் ஈகிள் ஓல்டு மாங்க் ஆகிய பிரபல தயாரிப்புகளையும் கபில் மோகன் உற்பத்தி செய்கிறார்.
பல ஆண்டுகளாக கோல்டன் ஈகிள் ஓல்டு மாங்க்தான் உலகிலேயே அதிகம் விற்கும் ரம் ஆகும்.
இந்தியாவில் தயாராகும் அயல்நாட்டு மதுபான வகைகளில் இதுதான் நம்பர் 1.
மோகன் மியாக்கின் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக கபில் மோகன் உள்ளார்.
1954 ஆம் ஆண்டு டிசம்பரில் தொழிலதிபர் நரேந்திர நாத் மோகனின் மகன் வேத் ரத்தன் மோகன் ஒரு மதுபானத்தை உற்பத்தி செய்தார். அவர் ஐரோப்பாவுக்கு சுற்றுலா சென்றபோது சந்தித்த பெனடிக்டைன் மாங்க்குகளுக்கு நன்றி செலுத்தும்வகையில் இந்த பானத்தை அவர் தயாரித்தார்.
இதைத் தொடர்ந்து அவர் தனித்துவமான டார்க் ரம்மான ஓல்டு மாங்க்கை உற்பத்தி செய்தார். இந்த ரம் ஓக் பேரல்களில் 7 வருடங்களுக்கு பதப்படுத்தப்படுகிறது.
இதனால் இந்த ரம்மின் சுவை அபாரமாக இருக்கிறது. வாடிக்கையாளர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. வேத் ரத்தன் மோகன் மறைந்தவுடன் அவரது சகோதரர் கபில் மோகன் நிறுவனத்தில் பொறுப்பேற்றார்.
கபில் மோகனின் தலைமைப்பண்பு மற்றும் தனது தயாரிப்பில் வைத்த மாறாத பெருமிதம் ஆகியவை ஓல்டு மாங்க் ரம்மை உச்சாணிக் கொம்புக்குக் கொண்டு சென்றது. எந்தவித விளம்பரங்களும் இல்லாமல் வாய்வழி பரிந்துரைகள் மூலமே ஓல்டு மாங்க் ரம் பிரபலமடைந்து விட்டது.
ஒருமுறை இந்த ரம்மை சுவைத்துவிட்டால் பின்னர் அதைத் தவிர வேறு பிராண்டுகளை வாடிக்கையாளர்கள் நாடுவதில்லை என்பதை கபில் மோகன் புரிந்து கொண்டார்.
அவரது வழிகாட்டுதலில் இந்தியாவின் பெருமையாக ஓல்டு மாங்க் உருவெடுத்தது. மதுபான சந்தையில் மிகப் பெரிய பங்கை ஓல்டு மாங்க் கைப்பற்றியுள்ளது.
ஓல்டு மாங்க் கபில் மோகனின் தலைமையில் மோகன் மியாக்கின் நிறுவனம் பல்வேறு தயாரிப்புகளில் ஈடுபட்டது. காலைச் சிற்றுண்டிகள், பழரசங்கள், மினரல் வாட்டர் போன்றவற்றை உற்பத்தி செய்தது. இருப்பினும் மதுபானச் சந்தையில் ஓல்டு மாங்க் பிடித்த இடத்துக்கு இவையெல்லாம் நிகராகாது.
இந்திய ராணுவத்தில் கபில் மோகனின் வாழ்க்கைப் பயணம் தொடங்கியது. ஒரு பிரிகேடியராக அவர் சிறப்பாகவும் மதிப்புக்குரியவராகவும் பணியாற்றினார்.
அவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு அவருக்கு விசிஷ்ட் சேவா மெடலையும் பத்ம ஸ்ரீ விருதையும் வழங்கி கௌரவித்தது.
மோகன் ஆர்த்தோஸ் ப்ரூவரீஸ் லிமிடெட், மோகன் ராக்கி ஸ்பிரிங்வாட்டர் ப்ரூவரீஸ் லிமிடெட், சாகர் சுகர்ஸ் அண்ட் அலைட் புராடக்ட்ஸ் லிமிடெட், ஆர்.ஆர்.பி. எனர்ஜி லிமிடெட் , சோல்க்ரோம் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் போன்ற பிற குழு நிறுவனங்களின் இயக்குனராகவும் கபில் மோகன் இருந்தார். டிரேட் லிங்க்ஸ் பிரைவேட் லிமிடெட் (1956-1966) இன் முன்னாள் நிர்வாக இயக்குநராகவும் அவர் பதவி வகித்தார்.
காஜியாபாத்தில் உள்ள நரேந்தர் மோகன் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் பதவி வகித்தார். மொஹியல் சமூகத்தின் புரவலராக அவர் முக்கிய பங்கு வகித்தார். கபில் மோகன் மாரடைப்பு காரணமாக 2018 இல் காலமானார். அதன்பின்னர் மோகன் மியாக்கின் டிஸ்டிலரீஸ் நிறுவனத்தை இப்போது அவரது மருமகன்களான ஹேமந்த், வினய் மோகன் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications