ஒரு நாட்டிற்கு தலைமை பொறுப்பில் இருப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. பல்வேறு சிக்கல்களையும், பல்வேறு சவால்களையும் திறம்பட எதிர்கொள்ள வேண்டும். அதே வேளையில் சக நாட்டவர்களோடு நட்புறவையும் கொண்டிருக்க வேண்டும் நமது உள்நாட்டு கொள்கைகளையும் கைவிட்டு விடக்கூடாது.
இப்படி சவாலான ஒரு பதவி தான் ஒரு நாட்டின் அதிபராகவோ அல்லது பிரதமராகவோ இருப்பது. இவ்வாறு உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு அதற்கேற்ற வகையிலான ஊதியமும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சர்வதேச அளவில் அதிக ஊதியம் பெறக்கூடிய முதல் 10 தலைவர்கள் யார் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

சிங்கப்பூர் நாட்டின் பிரதமருக்கு தான் அதிகபட்சமான ஊதியம் கிடைக்கிறது அதாவது சிங்கப்பூர் பிரதமராக தற்போது இருக்கக்கூடிய லாரன்ஸ் வாங்கிற்கு ஆண்டுக்கு 1.6 மில்லியன் டாலர்கள் ஊதியம் கிடைக்கிறது. அது மட்டும் இன்றி இவரது ஊதிய தொகுப்பில் போனஸ்கள் மற்றும் பிற கொடுப்பனவுகள் இருப்பதால் உலகிலேயே அதிக ஊதியம் பெறக்கூடிய ஒரு நாட்டின் தலைவர் என்ற பெருமையை இவர் பெற்றிருக்கிறார்.
இரண்டாவதாக இந்த பட்டியலில் இருப்பது ஹாங்காங் நகரை ஆளக்கூடிய தலைமை அதிகாரி. ஹாங்காங் தலைமை அதிகாரியான ஜான் லீ கா சியு ஆண்டுக்கு 6.95 லட்சம் அமெரிக்க டாலர்களை ஊதியமாக பெறுகிறார். 1997-ஆம் ஆண்டு பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்த ஹாங்காங் சீனா வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை அடுத்து ஹாங்காங்கை நிர்வகிக்கும் பொறுப்பு அதன் தலைமை அதிகாரியாக நியமிக்கப்படும் நபருக்கு வழங்கப்பட்டது.
இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருப்பது சுவிட்சர்லாந்து அதிபர் வியோலா, இவருக்கு 5.30 லட்சம் டாலர்கள் ஊதியமாக கிடைக்கின்றன. அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் 4 லட்சம் டாலர்களை ஆண்டு ஊதியமாக பெற்று இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஷ் 3.90 லட்சம் டாலர்களை ஆண்டு ஊதியமாக பெற்று இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
அடுத்ததாக ஜெர்மன் பிரதமர் ஒலாஃப் 3.67 லட்சம் டாலர்கள் ஊதியமாக பெற்று இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறார். ஆஸ்திரியா நாட்டு பிரதமரான கார்ல் நெஹமர் 3.07 டாலர்களை பெறுகிறார்.
அடுத்ததாக கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ 2.92 லட்சம் அமெரிக்க டாலர்களை ஆண்டு ஊதியமாக பெறுகிறார். நியூசிலாந்தின் பிரதமர் கிரிஸ்டோபர் லக்ஸான் 2.88 லட்சம் டாலர்களை ஆண்டு ஊதியமாக பெற்று இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா 2.56 லட்சம் டாலர்களை ஆண்டு ஊதியமாக பெற்று இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறார்.
சர்வதேச அளவில் எந்த ஒரு நாட்டிற்கும் தலைவராக இல்லை என்றாலும் இந்த பெண்மணி அதிக ஊதியம் பெறக்கூடிய உலக தலைவர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். ஜெர்மனி நாட்டை சேர்ந்த உசுலா வாடர் லியான் ஐரோப்பிய ஆணையத்தின் 13-வது தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது ஆண்டு ஊதியம் 3.64 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும் .
Story written by: Devika


Click it and Unblock the Notifications