டெல்லி: உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான் எப்பேர்ப்பட்ட அப்பாடக்கர் உணவகமாக இருந்தாலும் உள்ளூர் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கேற்ப தங்களது மெனுக்களை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.
ஸ்டார்பக்ஸ் தந்தூரி பனீர் ரோல்களை விற்கிறது, கேஎப்சி பனீர் ஜிங்கர் பர்கர்களை விற்கிறது. பர்கர் கிங் பனீர் கிங் பர்கரை விற்கிறது. அந்தப் பாதையில் டோமினோஸ் பிட்சா நிறுவனமும் தனது மூலப்பொருட்களின் தன்மையை மாற்றியமைத்தது. மேற்கத்திய பாணியில் தனக்கென்று முத்திரை பதித்திருந்த டோமினோஸ் பிட்சா உள்ளூர் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப மாவின் சுவையை மாற்றியது. விளைவு இன்றைக்கு நாட்டில் 170 நகரங்களில் 806 கிளைகளை டோமினோஸ் பிட்சா அமைத்து வியாபாரம் நடத்தி வருகிறது. இது மெக்டோமினஸை விட இரண்டு மடங்கு அதிகமாகும். உலகிலேயே மிக மலிவான விலையில் பிட்சாக்களை டோமினோஸ் இந்தியா நிறுவனம் தயாரித்து விற்கிறது.

துணிச்சலான புது உத்திகள், வாடிக்கையாளர்களின் மனப்போக்கை அறிந்து வைத்தல், மேற்கத்திய பாணி ஆகியவற்றுடன் டோமினோஸ் இந்தியா வெற்றிகரமான ஒரு உணவு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே அதன் ஒட்டுமொத்த விற்பனையில் 20 சதவீதத்தை இந்தியாவில் செய்கின்றது. டோமினோஸின் இந்த வெற்றிக்கெல்லாம் காரணம் ஒருவர். அவர் பெயர் அஜய் கௌல். இந்தியாவில் டோமினோஸின் ஃப்ரான்சைஸராக உள்ள ஜூபிலன்ட் ஃபுட்வொர்க்ஸின் சிஇஓவாக அஜய் உள்ளார். டோமினோஸ் தயாரிப்புகளை மாற்றியமைத்து உலகளவில் இந்தியாவில் மெக்டோனல்டு நிறுவனத்தை டோமினோஸ் முந்துவதற்கு காரணகர்த்தாவாக இவர் விளங்குகிறார்.
தில்லி ஐஐடியில் படித்து ஜாம்ஷெட்பூர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ முதுகலைப்பட்டம் படித்தவர். B2C துறையில் 30 ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ளார்.
அவரது தலைமையின் கீழ் ஜூபிலன்ட் ஃபுட்வொர்க் நிறுவனம் 2010 ஆம் ஆண்டில் ஐபிஓ வெளியிட்டது. 2010-20 ஆண்டுகாலத்தில் மிக லாபகரமான ஐபிஓவாக இது விளங்கியது. நிறுவனத்தை அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக லாபத்தை தரும் அளவுக்கு உயர்த்தினார்.
Chaayos, California Burrito, Daalchini போன்ற நிறுவனங்களின் தலைமை ஆலோசகராகவும் பல ஸ்டார்ட்அப்களின் முதலீட்டாளராகவும் அஜய் உள்ளார். ஈஷா லீடர்ஷிப் அகாடமியின் சார்பில் சிஇஓ லீடர்ஷிப் நிரலை நடத்திக்காட்டினார். சத்குருவின் வழிகாட்டுதலுடன் இதை அஜய் சாதித்தார்.
2005 ஆம் ஆண்டில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளின் டோமினோஸ் ஃப்ரான்சைசியாக இருந்த ஜூபிலன்ட் ஃபுட்வொர்க்ஸில் சேர்ந்தார். அப்போது இந்திய மார்க்கெட்டில் பிட்சா அதிகம் அறிமுகம் இல்லாத உணவாக இருந்தது. இருப்பினும் அவரது தொலைநோக்குத் திட்டங்களால் மத்திய வருவாய் வாடிக்கையாளர்களை குறிவைத்து டோமினோஸ் பிட்சாவை வெற்றிகரமாக மார்க்கெட் செய்ய முடிந்தது.
வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்படி ஆகக்கூடிய விலையில் பிட்சாக்களை தயாரிக்க வைத்தார். ரூ.45க்கு ஃபன் மீல் பிட்சா, ரூ.35க்கு பிட்சா மேனியா ஆகிய ஐட்டங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இது இந்தியாவில் பிட்சா விற்பனையின் போக்கையே மாற்றியது.
இது தவிர அஜய்கௌல் அறிமுகப்படுத்திய, 30 நிமிடங்களில் டெலிவரி அல்லது இலவசம் என்ற திட்டம் வாடிக்கையாளர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அத்துடன் நிறுவனத்தின் டெலிவரி திறனை விரைவாக்கியது.
அஜய் தலைமையின் கீழ் ஜூபிலன்ட் ஃபுட்வொர்க்ஸின் ஆண்டு விற்பனை 2016இல் 2 ஆயிரத்து 410 கோடி ரூபாயாக உயர்ந்தது. இது 2005ல் அந்நிறுவனத்தின் விற்பனயான 73 கோடி ரூபாயில் இருந்து 33 மடங்குகள் அதிகமாகும்.
அஜய் தனது வெற்றிகரமான செயல்பாட்டுக்கு காரணம் சத்குரு ஜக்கி வாசுதேவ் என்கிறார். அவருடன் தனக்குள்ள தொடர்பினால் இதை சாதிக்க முடிந்ததாக அஜய் கூறுகிறார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications