புனே: 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி இனி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை அவசியம் என மத்திய அரசு அப்போது கூறியது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு சாதகமாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்தன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்தது என்பதை மறுப்பதற்கு இல்லை.
இன்று எங்கு பார்த்தாலும் ஒரு கியுஆர் குறியீடு அல்லது செல்போன் எண்ணை பயன்படுத்தியே பரிவர்த்தனை மேற்கொள்ள முடிகிறது. இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. மத்திய அரசு இப்படி ஒரு தைரியமான நடவடிக்கைகளை நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக இருந்தவர் அனில் போகில் என்பவர்.

யார் இந்த அனில் போகில்?: அனில் போகில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். இவர் புனேவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ArthaKranti என்ற நிறுவனத்தை நிறுவியவர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து வளர்ந்து வந்த அவருக்கு அரசியலிலோ அல்லது நிதி துறையிலோ பெரிய அளவில் தொடர்பு கிடையாது .இவர் முழுக்க முழுக்க ஒரு பொறியாளராக தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் நிதித்துறையின் மீது ஆர்வம் பிறந்து ArthaKranti என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இந்தியாவில் கருப்பு பண புழக்கத்தை தடுக்க ரொக்கப் பரிவர்த்தனைகளை குறைக்க வேண்டும் என அறிந்து கொண்டார் . இதனை அடுத்து ArthaKranti அமைப்பு தொடர்ச்சியாக நாட்டின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் கருப்பு பண ஒழிப்பு வரி ஏய்ப்புகளை தடுப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை நடத்தி அறிக்கைகளை வெளியிட்டது.
நரேந்திர மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோதே அவரை சந்தித்த அனில் போகில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கருப்பு பணத்தை ஒழிக்கவும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அவசியம் என கூறினாராம். இது தொடர்பாக தன்னுடைய நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கையையும் வழங்கினாராம். பின்னர் நரேந்திர மோடி மத்தியில் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இந்த ஐடியாவை செயல்படுத்தினார்.
2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக கூறினார். தற்போதும் அனில் போகில் தன் நிறுவனம் மூலம், இந்திய பொருளாதார மேம்பாட்டுக்காக நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்.
Written by: Devika


Click it and Unblock the Notifications