துபாய்: ஜெம்ஸ் எஜுகேஷன் (GEMS Education) என்பது துபாயில் மிகவும் புகழ்பெற்ற ஒரு கல்வி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்களுடைய கல்வி நிலையத்தை தொடங்க இருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட இருக்கும் மிக ஆடம்பரமான பள்ளியாக ஜெம்ஸ் கல்வி நிறுவனம் இருக்கப் போவதாக சொல்லப்படுகிறது. மற்ற பள்ளிகளுடன் ஒப்பிடும்போது இங்கே அதிக அளவில் பள்ளி கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அந்த அளவிற்கு இங்கே அதிநவீன வசதிகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் உரிமையாளர் சன்னீ வர்கே 3.8 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்டவர்.

கேரள மாநிலத்தை சேர்ந்த மரியம், கே எஸ் வர்கே ஆகியோரின் மகன் தான் சன்னீ வர்கே. 1960களில் மரியம் மற்றும் அவருடைய கணவர் கே எஸ் வர்கே ஆகியோர் துபாய்க்கு இடம் பெயர்ந்து விட்டனர். அப்போது துபாயில் இவர்கள் சொந்தமாக தொடங்கிய ஆங்கில உயர்நிலை பள்ளி தான் ஜெம்ஸ் கல்வி நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது.
துபாயில் வெளிநாடுகளில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். அவ்வாறு வரக்கூடிய நபர்கள் குடும்பத்துடன் செட்டில் ஆகும்போது அவர்களின் குழந்தைகளை சேர்ப்பதற்கு சரியான அளவு பள்ளிகள் இல்லை. அரபு பள்ளிகளில் தான் குழந்தைகளை சேர்க்க வேண்டும் ஆனால் அதில் துபாய் நாட்டவருக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த நிலையில் தான் வெளிநாட்டு வேலையாட்களின் குழந்தைகளுக்காக பள்ளி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மரியமுக்கு ஏற்பட்டது. அப்படிதான் 1968 ஆம் ஆண்டு துபாயில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் பிற நாட்டவர்களின் குழந்தைகளுக்காக ஆங்கில உயர்நிலைப் பள்ளியை தொடங்கினர். இதனை அவர்களின் மகனான சன்னீ வர்கே 2000 ஆம் ஆண்டு குளோபல் எஜுகேஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் என்ற பெயரில் ஜெம்ஸ் கல்வி குழுமம் என பெயர் மாற்றம் செய்தார்.
துபாயில் மிகவும் புகழ்பெற்ற பள்ளியாக ஜெம்ஸ் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது ஐக்கிய அரபு ஐக்கிய அரபு அமீரகத்திலும் இந்த பள்ளி திறக்கப்பட இருக்கிறது. 100 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் இந்த பள்ளியின் கட்டுமான பணிகள் நடைபெற்ற வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் துபாய் அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த கல்வி குழுமம் தற்போது இங்கிலாந்து, இந்தியா ,ஆப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் அமெரிக்காவிலும் கிளைகளை பரப்புகிறது.
தற்போது சன்னீ வர்கேயின் பிள்ளைகளான டினோ வர்ஜே, , ஜெய் வர்கே ஆகியோர் பள்ளி மேலாண்மை பணிகளை பார்த்துக் கொள்கின்றனர் . ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைக்கப்பட இருக்கும் ஜெம்ஸ் பள்ளியில் 600 பேர் அமரக்கூடிய வகையிலான ஆடிட்டோரியம், மிகப்பெரிய நீச்சல் குளம், அதிநவீன கால்பந்து விளையாட்டு மைதானம், ரோபோடிக்ஸ் ஆய்வகங்கள் மற்றும் தொழில்நுட்ப மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி கட்டணமாக 27 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. அடுத்தடுத்த வகுப்பு செல்ல செல்ல அதிகபட்சமாக 48 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
Story written- devika


Click it and Unblock the Notifications