அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரத்தில் இருந்து நார்த் கரோலினா-வின் சார்லோட் பகுதிக்கு காலை 6:20 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் சுமார் 18 மணிநேரம் தாமதத்துடன் நள்ளிரவு கிளம்பியது. 18 மணிநேரம் காத்திருக்க முடியாத பணிகள் மாற்று விமானத்தில் சென்ற நிலையில் ஒரு பணி மட்டும் 18 மணிநேரம் காத்திருந்து போர்டிங் செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் ஓக்லஹோமா நகரத்தில் இருந்து செல்ல வேண்டிய விமானம் 18 மணிநேரம் தாமதத்திற்கு பிறகு, பயணிகள் போர்டிங்-கிற்கு அழைக்கப்பட்டனர். அப்போது யாருமே வராத நிலையில் Phil Stringer என்பவர் மட்டுமே போர்டிங் செய்தார்.

இதனால் ஒட்டுமொத்த விமானத்தில் Phil Stringer மட்டுமே பயணம் செய்ய வேண்டிய நிலை உருவானது. அதுமட்டும் அல்லாமல், விமானத்தின் பணி பெண்கள், விமானிகள் இவருக்கு ராஜ மரியாதை கொடுத்ததோடு பாட்டுப்பாடி, டான்ஸ் ஆடி கொண்டாடியுள்ளனர்.
இதுகுறித்து Phil Stringer செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் குழு தனக்காக மட்டுமே வந்து பணியாற்றியது வருத்தமாக இருந்தது என கூறினார். ஆனால் விமானப் பணிப்பெண்கள் என்னையும் என்னுடைய செயலையும் கண்டு சிரித்துவிட்டு, விமானத்தில் "பிரைவேட் பார்ட்டி" ஆக மாற்றினார்கள் என Phil Stringer தனது டிக்டாக் கணக்கில் பதிவிட்டு உள்ளார்.
என்னுடைய விமானத்தில் டிக்கெட் வாங்கியவர்கள் 18 மணிநேரம் தாமதம் காரணமாக அனைவரும் கைவிட்ட நிலையில், நான் மட்டும் கடைசி வரையில் காத்திருந்த காரணத்தால் மொத்த விமானமும் என்னுடையதானது. இவருக்கு இப்போ FIRST CLASS எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.

Phil Stringer பதிவிட்ட டிக்டாக் வீடியோ தற்போது 16 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் பைலட் கூட விமானத்தில் அறிவிக்கும் அறிவிப்புகளை ஹே Phil Stringer, இந்த அறிவிப்பு உனக்காக மட்டும் தான் என சிரிப்புடன் தெரிவித்துள்ளார். இந்த பயணத்தில் பணி பெண்கள், பைலட், விமான சேவை நிர்வாகிகளிடம் சுமார் 400 முறை மன்னிப்பு கேட்டதாக தெரிவித்துள்ளார்.
இவர் நார்த் கரோலினா-வின் சார்லோட் பகுதியில் இருக்கும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் சிஓஓ ஆக பணியாற்ற உள்ளார்.
இந்தியாவில் விமான பயணம் இன்றும் பலருக்கு கனவாக இருந்தாலும், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் விமான போக்குவரத்து சேவை சிறப்பான முறையில் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால் அமெரிக்காவில் ரயில் போக்குவரத்து கட்டணமும், விமான சேவைக்கும் மிகவும் குறைந்த அளவிலான வித்தியாசம் மட்டுமே இருக்கும்.
இதனாலேயே அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறிப்பாக உள்நாட்டில் விமான பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகம். வெளிநாட்டு பயணிகளுக்கு கிடைக்கும் பல சேவைகள் உள்நாட்டு பயணிகளுக்கும் அளிக்கப்படுகிறது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications