மனைவி சொல்லை தட்டாத ஷெப்பர்ட் பேரோன்.. ATM பின் நம்பர் 4 டிஜிட்-ல இருக்க இதுதான் காரணமா!

சென்னை: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் ஏடிஎம்-களை தான் பணம் எடுக்கவும், பணம் டெபாசிட் செய்யவும் பயன்படுத்துகின்றனர். முன்பு ஒரு காலத்தில் வங்கியை மட்டும் சார்ந்து இருந்த மக்கள், தற்போது ஆன்லைன் மூலமாகவும் ஏடிஎம் மூலமாகவும் எளிதில் சேவை பெறுகின்றனர். என்றாவது உலகம் முழுக்க உள்ள பெரும்பாலான ATM-களிலும் 4 இலக்கங்களில் பின் நம்பர் இருப்பது ஏன் என்று யோசித்ததுண்டா.. அதன் சுவாரஸ்ய வரலாறை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.

1960களில், ஜான் ஷெப்பர்ட் பேரோன் (John Shepherd-Barron) என்ற பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர், முதல் ATM இயந்திரத்தை வடிவமைத்தார். அந்த காலகட்டத்தில், பின் (PIN) நம்பர்கள் 6 இலக்கங்களைக் கொண்டிருந்தன. ஆனால், ஷெப்பர்ட் பேரோனின் மனைவி கரோலின் முர்ரே (Caroline Murrey), 6 இலக்கங்கள் மிகவும் அதிகம் என்றும், மக்கள் தங்கள் பின் நம்பரை மறந்து விடுவார்கள் என்றும் கருத்து தெரிவித்தார். அவர் தன்னுடைய கணவரிடம், தான் தன் பின் நம்பரை நினைவில் வைத்துக் கொள்வதில் சிரமப்படுவதாகவும், 4 இலக்கங்கள் போதுமானதாக இருக்கும் என்றும் கூறினார்.

 மனைவி சொல்லை தட்டாத ஷெப்பர்ட் பேரோன்.. ATM பின் நம்பர் 4 டிஜிட்-ல இருக்க இதுதான் காரணமா!

அதன் பின் ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியின் யோசனையை ஏற்றுக்கொண்டு, ATM பின் நம்பரை 4 இலக்கங்களாகக் குறைத்தார்.

இதுபோல் 4 இலக்கங்களில் பின் நம்பர்களை வைத்திருப்பதன் நன்மைகள் என்னவென்று பார்த்தால், நீங்கள் எளிதில் அவற்றை நினைவில் வைத்துக் கொள்ளலாம். அதேபோல பாதுகாப்பு கூடுதலாகவும், சிக்கல் குறைவாகவும் இருக்கும். தற்போது பலரும் UPI பின் நம்பர்களை 6 இலக்கங்களுக்கு வைத்துவிட்டு, பின்னர் மறந்துவிடுவார்கள். இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க 4 இலக்க ATM பின் நம்பரைப் பயன்படுத்தலாம்.

இன்று உலகில் உள்ள பெரும்பாலான ATM-களில் பின் நம்பர்கள் 4 இலக்கங்களில் உள்ளன. ஆனால் சில நாடுகளில் 5 அல்லது 6 இலக்கப் பின் நம்பர்களையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் 4 இலக்கப் பின் நம்பர் தான் மிகவும் பொதுவான ஒன்று.

மேலும் ATM இயந்திரங்கள் கண்டுபிடித்தபோது, அவற்றின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. பட்டன்களை கொண்டு நம்பரை என்டர் செய்ய வேண்டி இருந்தது. இது பெரும்பாலானோருக்கு சிக்கலாக இருந்துள்ளது. தற்போது டச்சு ஸ்கிரீன் வசதி வந்து விட்டதால் சட்டென்று பின் நம்பரை அழுத்தி 2 நிமிடத்திற்குள் பணத்தை எடுத்து விட்டு வெளியில் வந்து விடுகிறோம். ஆனால் அப்போது அந்த வசதி இல்லாததால், இது போன்ற 4 இலக்கங்களில் பின் நம்பர் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரேசிலில் மக்கள் ATM இயந்திரங்களின் மூலம் பணத்தை எடுப்பதற்கு பின் நம்பர்களைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக பயோமெட்ரிக் விவரங்களை பயன்படுத்துகின்றனர். எப்படி ஆதார் கார்டுக்கு பயோமெட்ரிக் விவரங்கள் முக்கியமானதாக உள்ளதோ.. அதேபோல அந்நாட்டில் அனைவரும் ATM-இல் பணம் எடுப்பதற்கு அவர்களின் பயோமெட்ரிக் விவரங்களைத் தான் நம்புகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+