மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அறிவித்த புதிய வருமான வரி சட்டம் 2025 கடந்த வாரம் திருத்தம் செய்வதற்காக திரும்ப பெறப்பட்டு மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இது தனிநபர்கள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கும் வரி சட்டத்தை நவீனமயமாக்கும் முக்கியமான சீர்திருத்தமாக உள்ளது.
இந்த சட்டம் வரி நடைமுறைகளை எளிமைப்படுத்தி, வரி செலுத்துவோரின் சுமைகளை குறைக்கும் நோக்கம் கொண்டது. லோக்சபாவில் திங்கள்கிழமை ஒப்புதல் பெறப்பட்ட இந்த சட்டம், இன்று ராஜ்யசபாவிலும் ஒப்புதல் பெற்றது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக உறுப்பினர் பைஜயந்த் பாண்டா தலைமையிலான நாடாளுமன்ற தேர்வுக்குழுவின் பரிந்துரைகளை உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்தக் குழு, வரி அமைப்பை எளிமைப்படுத்தி புதுப்பிக்க 285 பரிந்துரைகளை வழங்கியது.
- புதிய வருமான வரி சட்டம் 2025, சட்ட உரையின் அளவையும் பிரிவுகளையும் சுமார் 50 சதவீதம் குறைத்து, விதிகளை எளிய மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் வழங்குகிறது.
- புதிய வரி சட்டத்தில் வரி கால அமைப்பை எளிமைப்பட்டு உள்ளது. தற்போது மதிப்பீட்டு ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டு என்ற சிக்கலான வேறுபாட்டை நீக்கி, ஒருங்கிணைந்த "வரி ஆண்டு" என்ற முறை அறிமுகப்படுத்துகிறது. இதனால், வரி செலுத்துவோர் தங்கள் கணக்குகளை எளிதாக நிர்வகிக்க முடியும்.
- தனிநபர்கள் வருமாணன வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை தாண்டி ITR அறிக்கைகளை சமர்ப்பித்தாலும், வரி திரும்பப்பெறுதலை கோரும் வசதியை இந்த புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்துகிறது, இது தனிநபர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும்.
- பழைய வருமான வரி சட்டத்தில் இருந்தது போலவே புதிய சட்டத்திலும் இழப்புகளை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான (carrying forward losses) வசதியை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அறிவித்துள்ளது.
- நாடாளுமன்ற குழு பரிந்துரையின் படி, மதம் சார்ந்த அறக்கட்டளைகளுக்கு பெயர் இல்லாமல் அளிக்கும் நன்கொடைகளுக்கு வரி சலுகை வழங்கப்பட உள்ளது.
- எம்எஸ்எம்இ (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) வகைப்பாடுகளை எம்எஸ்எம்இ சட்டத்துடன் இணைக்கும் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டுள்ளது.
- டிடிஎஸ் (டிடிஎஸ்) திருத்த அறிக்கைகளை சமர்ப்பிக்கும் கால அளவை, 1961ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தின் கீழ் இருந்த ஆறு ஆண்டுகளிலிருந்து இரண்டு ஆண்டுகளாக குறைத்துள்ளது.
- குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் மற்றும் கிராட்யூட்டி கொடுப்பனவுகளுக்கான விலக்குகள் குறித்து தெளிவான விளக்கத்தை புதிய வருமான வரி சட்டம் 2025 வழங்குகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications