மத்திய அரசு கடந்த 21ஆம் தேதி நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்தியாவில் பல ஆண்டுகளாக மிகப் பழமையான தொழிலாளர் சட்டங்களே நடைமுறையில் இருந்து வந்தன. இந்த நவீன தொழில் சூழல்களுக்கு ஏற்ற வகையில் தொழில் சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில் தான் மத்திய அரசு 29 தொழிலாளர் சட்டங்களை வெறும் 4 சட்டங்களாக சுருக்கி நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது .
குறிப்பாக அமைப்பு சாரா துறையில் இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கும், அனைத்து ஊதிய பலன்களும் கிடைக்கக்கூடிய வகையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் இந்த புதிய தொழிலாளர் சட்டத்தில் இடம் பெற்று இருக்க கூடிய சில அம்சங்கள் நிறுவனங்கள் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது மட்டும் இல்லாமல் வேலையில் இருந்து நீக்குவதையும் எளிமையாக்கி இருக்கின்றன என ஒரு சாரா கூறுகின்றனர் . டீம் லீஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரமானி தைதி , ndtvக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை விளக்கியுள்ளார்.

இதற்கு முன்பு 100 ஊழியர்கள் அல்லது பணியாளர்களுக்கும் மேல் கொண்டு செயல்படக்கூடிய நிறுவனங்கள் அல்லது ஆலைகள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது அல்லது ஆலையை மூடுகிறது என்றால் அரசின் அனுமதியை பெற வேண்டும் .ஆனால் தற்போது அதனை 300 ஊழியர்களாக உயர்த்திவிட்டனர். அதாவது 300க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே இனி ஊழியர்கள் பணி நீக்கம் மற்றும் ஆலை மூடுவது போன்ற செயல்பாடுகள் தொடர்பாக அரசின் அனுமதியை பெற வேண்டும்.
எனவே சிறிய அளவில் அதாவது 300க்கும் கீழ் ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்பாகவும் ஆலை மூடுவது , நிறுவனத்தை மூடுவது தொடர்பாகவும் இனி அரசின் அனுமதியை பெற வேண்டிய அவசியம் இல்லை . அதாவது 299 ஊழியர்கள் மற்றும் அதற்கும் கீழ் எண்ணிக்கை கொண்ட ஊழியர்களை கொண்டு செயல்படக்கூடிய நிறுவனங்கள் இனி எளிதாக ஊழியர்களை வேலைக்கு அமர்த்தலாம் நினைத்த நேரத்தில் அவர்களை வேலை விட்டு நீக்கலாம் ,திடீரென ஆலையை மூடலாம் இதற்காக அரசின் அனுமதியை அவர்களுக்கு தேவையில்லை .
நிறுவனங்களை பொறுத்தவரை இது அவர்களுக்கு சாதகமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது என்கிறார் ரமாணி. பிஸ்னஸ் டிமாண்ட் அதிகமாக இருக்கும் போது தேவையான எண்ணிக்கையில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ளலாம் , டிமாண்ட் இல்லாத சமயங்களில் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கலாம் என்கிறார். இந்தியாவில் செயல்படக்கூடிய பல்வேறு சிறு குறு நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை 300க்கும் குறைவாகவே இருக்கிறது என்பதால் அந்த சமயத்திற்கான தொழில் சூழல்களை பொறுத்து அரசு தலையீடு இல்லாமல் ஊழியர்கள் எண்ணிக்கையை மாற்றி அமைத்துக் கொள்ள இந்த தொழிலாளர் சட்டம் வழிவகை செய்துள்ளது என அவர் குறிப்பிடுகிறார்.
அதே போல ஃபிக்ஸட் டெர்ம் எம்பிளாய்மெண்ட் எனப்படும் ஒரு புதிய அம்சமும் இந்த தொழிலாளர் சட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது . இதன்படி ஒரு பிராஜெக்ட் அல்லது ஒரு குறிப்பிட்ட சீசனுக்கு நிறுவனங்கள் புதிதாக ஒப்பந்த அடிப்படையில் அதாவது குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பணியில் அமர்த்தி அந்த ப்ராஜெக்ட் முடிவடைந்த உடன் அவர்களை நீக்கிவிடலாம் என்பதற்கும் வழி வகை செய்யப்பட்டிருக்கிறது.
300க்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்யக்கூடிய நிறுவனங்களில் ஊழியர்கள் பார்வையில் பார்க்கும்போது அவர்களுக்கான பணி பாதுகாப்பு என்பது குறைந்திருப்பதாக ஒரு சாரார் கூறுகின்றனர். அதே வேளையில் அமைப்புசாரா துறையில் இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளும் கிடைக்கின்றன . குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் என்பது உறுதி செய்யப்படும் . இது தவிர அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்களும் கிடைக்கும் .
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications