டெல்லி: ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் கைலாக் (Kylaq) என்ற ஒரு புதிய எஸ்யூவி ரக காரினை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட 10 நாட்களிலேயே 10000 புக்கிங் பெற்றுள்ளது. இதனால் டாடாவின் நெக்ஸான், ஹூண்டாயின் வென்யூ, கியாவின் சொனட் மற்றும் மகேந்திராவின் எக்ஸ்யூவி கார்களுக்கு பெரும் போட்டியாக கைலாக் உருவாகும் என கருதப்படுகிறது.
முதன்முறையாக ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் வெளியிடக்கூடிய சப் 4 மீட்டர் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் இதுவாகும். கார்களுக்கான முன்பதிவு டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கியது. இந்த கார்கள் ஜனவரி 27ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரினை முன் பதிவு செய்யும் முதல் 33 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு காம்ப்ளிமென்ட்டாக 3 ஆண்டுகளுக்கான நிலையான பராமரிப்பு பேக்கேஜ் வழங்கப்படும் என ஸ்கோடா நிறுவனம் கூறியுள்ளது.
கைலாக் கார் குறைந்த பராமரிப்பு கட்டணம் கொண்டது என ஸ்கோடா நிறுவனம் கூறுகிறது. அதாவது முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 0. 24 ரூபாய் மட்டுமே பராமரிப்பு செலவாக இருக்கும் என ஸ்கோடா நிறுவனம் கூறுகிறது. ஸ்கோடா நிறுவனம் தங்களுடைய கைலாக் காரை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக ட்ரீம் டூர் என்ற பெயரில் இந்தியா முழுவதும் இந்த காரில் பயணம் செய்ய இருக்கிறது.
டிசம்பர் 13 ஆம் தேதி முதல் சக்கான் உற்பத்தி ஆலையில் இருந்து இந்த காரின் பயணம் தொடங்குகிறது. மொத்தம் மூன்று கைலாக் எஸ்யூவி கார்கள் மூன்று வித்தியாசமான வழிகளில் 43 நாட்களில் 70 நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றன.ஜனவரி 25ஆம் தேதி இவை புறப்பட்ட இடத்திற்கு மீண்டும் திரும்ப உள்ளன .
ஒரு கார் புனே,பானாஜி, மங்களூர், மைசூர் ,பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்கிறது. மற்றொரு கார் மும்பை, சூரத், வதோத்ரா, அகமதாபாத், டெல்லி ஆகிய நகரங்களுக்கு செல்கிறது. மற்றொரு கார் நாசிக், நாக்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.0 லிட்டர் TSI இன்ஜின் கொண்ட கைலாக் கார் 6 ஸ்பீடு எம்டி கன்வெர்ட்டர்களையும், 6 ஸ்பீடு எம்டி கன்வெர்ட்டர்களையும் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 188 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியுமாம். 10.5 நொடிகளில் இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை எட்டும் என ஸ்கோடா நிறுவனம் கூறுகிறது.
தற்போது இந்த நிறுவனம் நான்கு வகை பாடுகளில் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர் பிளஸ் மற்றும் பிரஸ்டீஜ் என குறைந்தபட்சம் 7.89 லட்சம் ரூபாயிலிருந்து அதிகபட்சம் 14.40 லட்சம் ரூபாய் வரை இந்த காரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications